இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சில அடிப்படை தேவைகள் இருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது நீர் மற்றும் உணவு. ஒருவன் தன் செல்வத்தையும் புகழையும் இழந்தால் கூட வாழ முடியும் ஆனால் நீரும் உணவு இல்லை என்றால் அதனால் உயிர் வாழ முடியாது! இதற்காகவே பல தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள். பசியாற வந்தவருக்கு வயிறு மற்றும் மனமும் நிறையும்படி உணவளிப்பது மிகச்சிறந்த தானமாகவும் மிகச் சிறந்த பண்பாகவும் போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட அன்னதானத்தின் மகிமையை மகாபாரதத்திலும் காணலாம், அதாவது மகாபாரதத்தின் இறுதிப் போரில் கர்ணன் தன் உயிர் பிரியும் நேரத்தில் கிருஷ்ணரிடம் இரண்டு வரங்களை வேண்டி இருந்தான் அதில் ஒன்று தன் உயிர் பிரிந்த உடன் தன் தாயான குந்தியிடம் இதனை தெரிவிக்க வேண்டும் என்றும் இரண்டாவது வரமாக கண்ணா நான் மறுபிறவி கண்டிப்பாக எடுப்பேன் என்பதை நான் அறிவேன் ஏனென்றால் நான் என் வாழ்நாளில் எத்தனையோ தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்ததில்லை அன்னதானம் செய்யாமல் வேறு எந்த தானம் செய்திருந்தாலும் அது கர்ம வினையை அழிக்காது எனக்கு புண்ணியமும் சேராது, அதனால் நான் மறுபிறவி எடுக்கும் பொழுது அன்னதானம் செய்யும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்றும் வேண்டியிருந்தார் என புராண கதைகள் கூறுகிறது.
தானத்தில் சிறந்தவனாக கர்ணன் வழங்கினாலும் அவன் அன்னதானத்தை செய்யாத காரணத்தினால் தன் பாவத்தை அழிக்க முடியாமல் புண்ணியத்தையும் சேர்க்க முடியாமல் மரணத்தை தழுவினான். அதுமட்டுமின்றி ஒருவர் பசியில் இருக்கும் பொழுது அவரது வயிற்றில் அக்னி தீபமான நெருப்பு எரிந்து கொண்டிருக்குமாம் அதை நாம் உணவைக் கொண்டு அனைப்பதன் மூலம் யாக குண்டத்தில் ஆஹிதி இடும் புண்ணியத்திற்கு சமம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தானங்களில் பூதானம், கோதானம், வித்யாதானம், மஞ்சள் தானம், பூமி தானம், வஸ்திர தானம், திலதானம், நெய் தானம், வெள்ளி தானம், தேன் தானம், தண்ணீர், பால் தானம், சந்தன கட்டை தானம் என பல வகைகள் உள்ளது. ஆனால் அவற்றில் அனைத்திலும் சிறந்தது அன்னதானம் என்று பெரும் மகான்கள் சித்தர்கள் அறிஞர்கள் என பலராலும் போற்றப்படுகிறது. ஏனென்றால் அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீர்ந்து பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது மேலும் அன்னதானம் செய்யும் பொழுது துளசியையும் சேர்த்து தானமாக வழங்கினால் இரட்டிப்பான பலன் அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
அதோடு பாதயாத்திரை வருபவர்களுக்கு தலயாத்திரை வருபவர்களுக்கும் கிரிவலம் வருபவர்களுக்கும் நடந்து வரும் கலைப்பை போக்க பல இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்படுகிறது அதன் மூலம் அவர்களது ஆன்மா குளிர்வடைந்து முழு திருத்தியுடன் நம்மை அவர்களது ஆன்மாக்கள் வாழ்த்துகிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் தானம் குறித்த சிறப்பையும் அதிலும் குறிப்பாக அன்னதானம் செய்யப்படுவதில் பலனையும் ஒரு பெண்மணி கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், பத்து கோ தானம் பண்ணினால் ஒரு விஷர்பதானம் பண்ணியதற்கு சமமாகும்! 10 விஷற்பதானம் செய்தால் ஒரு குதிரை தானம் செய்ததற்கு சமம்! பத்து குதிரையை தானம் செய்தால் ஒரு யானையை தானம் செய்வதற்கு சமம் பத்து யானையை தானம் செய்தால் ஒரு யாகம் பண்ணியதற்கு சமம், 10 யாகம் செய்தால் ஒரே ஒரு ஹரி பக்தருக்கு தன்னுடைய பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பது சமம்! அப்படி பத்து ஹரி பக்தர்களுக்கு பத்து கன்னிகைகளை தானம் செய்வதற்கு சமமானது ஒரே ஒரு ஒருத்தரின் தாகத்தை தணிப்பது! இதோடு நிற்கவில்லை இதற்கு மேலேயும் 10 பேரின் தாகத்தை தணிப்பது ஒரே ஒருத்தரின் பசியை போக்குவதற்கு சமமாகும்! அதனால் விஷற்ப தானத்தில் இருந்து தொடங்குவதை விட அன்னதானத்தை நாம் அனைவரும் செய்தாலே பல புண்ணியங்கள் நம்மை வந்து சேரும் என்று கூறியுள்ளார்.