24 special

திருச்செந்தூர் முருகன் சிலையின் மர்ம வரலாறு!

thirusenthur murugan temple
thirusenthur murugan temple

ஆறுபடை வீடுகளைக் கொண்டுள்ள முருகப்பெருமான் தனது வீடுகள் அனைத்தையும் குன்றின் மேலே அமைத்தான் ஆனால் ஒரே ஒரு வீடு மட்டும் கடலை ஒட்டி அமைத்தான், அதுதான் திருச்செந்தூர் முருகன் கோவில். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் ஒன்பது அடுக்குகளையும் 157 அடி உயரத்தையும் கொண்டது. மேலும் திருச்செந்தூரில் வீரபாகு தேவர் அனைத்து கடவுள்களுக்கும் காவல் தெய்வமாக விளங்குவதால் திருச்செந்தூர் கோவிலில் வீரபாகு தேவருக்கும் தனி பூஜைகள் நடத்தப்படும் வீரபாகு தேவருக்கு பூஜைகள் நடந்து முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை செய்வார்கள். மேலும் இந்த கோவிலில் சிறப்பாக ஆண்டு முழுவதும் திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுர வாசல் அடைக்கப்பட்டு இருக்குமாம் ஆனால் சூரசம்காரம் முடிந்த பிறகு தெய்வானை திருமணம் நடைபெறும் நாளில் மட்டும் இந்த ராஜகோபுரம் திறக்கப்படுவதாக கூறுகிறார்கள். 


திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பாலசுப்பிரமணியசுவாமிக்கு எப்பொழுதும் வெண்ணிற ஆடை மட்டுமே சாட்டுகிறார்கள் மற்றும் சண்முகநாதருக்கு பச்சை நிறம் கொண்ட ஆடையை அணிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகனைக் குறித்து சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவிலில் முருகனின் சிலை ஒரு மாறுபட்ட வகையில் காட்சியளிக்கும் மற்ற எந்த முருகன் கோவிலிலும் இதுபோன்ற சிலையை காண முடியாது இதற்கு பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதாவது,மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1649) காலத்தில், டச்சு & போர்த்துகீசியர்களின் ஐரோப்பிய சக்திகள் இங்கு காலூன்றுவதற்காகப் போரிட்டன. போர்த்துகீசியர்கள் தூத்துக்குடியில் ஒரு தளத்தைக் கொண்டிருந்தனர், டச்சுக்காரர்கள் அருகிலுள்ள திருச்செந்தூரில் தரையிறங்கினர் அவர்களுக்கு இடையே ஒரு போர் நடந்தது. அதில் டச்சுக்காரர்கள் வென்ற பிறகு, அவர்கள் திருச்செந்தூர் கோவிலை ஆக்கிரமித்து அதை தங்கள் தளமாக ஆக்கினர். மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலை முற்றிலும் சீர்குலைத்து விட்டனர். 

டச்சுப் படைகளை வெளியேறச் சொன்ன திருமலை நாயக்கரிடம் திருச்செந்தூர் முருகன் பக்தர்கள் புகார் அளித்தனர், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். நாயக்கர் அவர்களை கோயிலில் இருந்து அகற்ற ஒரு சிறிய படையை அனுப்பினார். அந்த மோதலில், சில டச்சு வீரர்கள் உயிர் இழந்தனர், இதனால் டச்சுக்காரர்கள் கோயிலைக் கொள்ளையடித்து, சண்முக & நடராஜ விக்ரஹங்களை தங்கத்தால் ஆனது என்று நினைத்துக்கொண்டு எடுத்து தப்பி ஓடினார்கள். அப்படி டச்சுகாரர்கள் ஸ்ரீகங்காவிற்கு செல்லும் வழியில், அவர்கள் கடினமான வானிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு தாங்கள் சுமந்து வந்த தெய்வங்களே காரணம் என்று எண்ணி டச்சுக்காரர்கள் விக்ரஹங்களை கடலில் வீசிவிட்டு தப்பினர்.சிறிது நேரம் கழித்து, திருமலை நாயக்கரின் பிரதிநிதியான வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, ஆழ்கடலில் தான் இருப்பதாகக் கூறினார். அதோடு கடலில் மூழ்கி இருக்கும் இடத்திற்கு அடையாளமாக கடலின் உச்சியில் மிதக்கும் எலுமிச்சை மற்றும் கருடன் அந்த இடத்தை சுற்றி வருவதால் அந்த இடம் குறிக்கப்படும் என்று கூறினார்.

தூக்கத்திலிருந்து விழித்த வடமலையப்ப பிள்ளை உடனே, டைவர்ஸ் குழுவுடன் கடலுக்குப் புறப்பட்டார். அவர் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை மிதந்து வானில் கருடன் சுற்றி வருவதைப் பார்த்தார். டைவர்ஸ் உள்ளே சென்று விக்ரஹங்களை மீட்டனர். உப்பு நீர் தாக்கம் மற்றும் மீன் கடி காரணமாக, சுவாமியின் விக்ரஹம் மாறியது. வடமலையப்பப் பிள்ளை அவர்களைத் திருச்செந்தூருக்கு அழைத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இந்த சம்பவம் முழுவதும் கோயிலில் உள்ள கல்வெட்டில் டைவர்ஸ் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் கோவிலுக்கு சென்றாலும் இவற்றை காணலாம்! அதோடு டச்சுக்காரர்களை இங்கிருந்து விரட்டியதோடு சிலையையும் எடுத்துச் செல்ல முடியாதபடியான திருவிளையாடலை முருகன் அரங்கேற்றியது அப்பகுதி முழுவதும் சிலிர்க்க வைத்து பேச வைக்கும் வரலாறு.