24 special

பதட்டத்தில் திமுக...!பாஜக பக்கம் சென்ற வாக்குகள்...!

Mk stalin,gnana prakasam
Mk stalin,gnana prakasam

திமுகவிற்கு என்று எப்போதும் சிறுபான்மை சமூகங்களான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்களின் வாக்குகள் அதிக அளவில் கிடைக்கும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு திமுகவிற்கு 70 % சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் கிடைத்தது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்தது.


இந்த சூழலில் தற்போது திமுகவின் முதலுக்கே மோசம் விழுந்து இருக்கிறது, எந்த சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகம் திமுகவிற்கு ஆதரவை வழங்கியதோ அது பாஜக பக்கம் மாற தீர்மானம் போட்டதும், அதன் எதிரொலியாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் திமுக எம் பி ஞானதிரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் பரபரப்பை உண்டாக்கியது.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம், சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கல்வி நிலைக்குழு செயலாளராகவும், நெல்லை ஜான்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தாளாளராகவும் பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஞானதிரவியத்தை தாளாளர் மற்றும் கல்வி நிலைக்குழு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திருநெல்வேலி பிஷப் பர்னபாஸ் உத்தரவிட்டார்.

பிஷப் பர்னபாஸின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை நேற்று பூட்டினர். இதனை தட்டிக்கேட்ட பாதிரியார் காட்பிரே நோபலை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் காட்பிரே புகார் அளித்துள்ளார். மேலும் திமுக எம்.பி ஞானதிரவியம் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் துரைமுருகன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் அந்த கடிதத்தில், “திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார் வரப்பெற்றுள்ளது.ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலிபகுதியை பல கிறிஸ்தவ அமைப்புகள் திமுக ஆட்சியில் நமக்கு இருக்கும் சுதந்திரத்தை காட்டிலும் பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் சட்ட பிரச்சனைகள் உண்டாவது இல்லை, எந்த பாஜக எம் பி யும் கிறிஸ்தவ பாதிரியார் பேராயர் போன்றோரை அடித்தது கிடையாது.

ஏன் திருநெல்வேலி எம் எல் ஏ பாஜகவை சேர்ந்தவர்தான் அவரால் எந்த மோதலும் உண்டாகவில்லை எனவே ஏன் நாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்க கூடாது என பேச்சு எழுந்து இருக்கிறது.இந்த தகவல் திமுக தலைமைக்கு தெரியவரவே உடனடியாக மோதலுக்கு காரணமான திமுக எம் பி ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.