Tamilnadu

அந்த கேள்வி கேட்குறாரு நேரலையில் கை தட்டியா கொண்டாடுவீங்க ஆர்கே வை சூனியமாக்கிய விவாதம் !!


திமுக ஆதரவு விவாத பேச்சாளர் ஆர் கே நேரலையில் அரசியல் விமர்சகர் JVC ஸ்ரீராமால் முட்டு கொடுக்காதீங்க என விமர்சனம் செய்யப்பட்டதும் அதற்கு அதே விவாதத்தில் பங்கேற்ற வலது சாரிய ஆதரவாளர் கைதட்டி உற்சாகம் அடைந்த சம்பவமும் வைரலாகி வருகிறது.


தனியார் ஊடகம் ஒன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விவாதத்தை நடத்தியது இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார், பத்திரிகையாளர் ஆர் கே, அரசியல் விமர்சகர் JVC ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவாளர் சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்த விவாதத்தை தம்பி தமிழரசன் தொகுத்து வழங்கினார்.

இதில் பேசிய JVC ஸ்ரீராம் பத்திரிகையாளர் ஆர்கே வை பார்த்து எழுப்பிய கேள்விகள் வைரலாகி வருகின்றன, நாடாளுமன்றத்தில் 12 எம்பிகள் இடை நீக்கம் செய்யப்பட்டது தவறு என்றால் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி MLA கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது எந்த விதத்தில் சரி சொல்லுங்கள் என கேட்டார் இதற்கு குறுக்கிட்ட ஆர் கே ஏங்க பாராளுமன்றமும் சட்டமன்றமும் ஒன்றா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு JVC ஸ்ரீராம் சரியாக சொன்னீர்கள் அப்போ ஆர் கே அடிக்கடி குஜராத் மாடல் என்று சொல்கிறாரே ஏன் குஜராத்தில் பாராளுமன்றம் இருக்கிறதா என ஒரே போடாக போட்டார்  இதற்கு ஆர் கே எந்த பதிலும் கொடுக்காமல் சிரித்து மழுப்பினார் அதோடு நில்லாமல் JVC ஸ்ரீராம் நீங்கள் ஏன் முட்டு கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்ப அதனை சத்ய நாராயணன் கைதட்டி வரவேற்ற காட்சிகள் நிச்சயம் ஆர்.கே-வை சூனியம் ஆக்கியுள்ளன.

சமீப காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாட்களில் இருந்து காங்கிரஸ் திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள், எதிர்தரப்பு பத்திரிகையாளர்கள் ஆதரவாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறி வருவதும் குறிப்பாக அதிமுக ஆட்சியின் போது மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் திமுக ஆட்சியில் மத்திய அரசை மட்டும் விமர்சனம் செய்துவிட்டு திமுக ஆதரவாக செயல்படுவது இதுபோன்ற விவாதங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.