Tamilnadu

ஓமைக்ரான் வைரஸ் முக்கிய அப்டேட்! மக்களே.. உஷார்..!

Modi
Modi

உலக நாடுகளை பெரும் பரபரப்பாக வைத்திருக்கக்கூடிய ஓமைக்ரான் வைரஸ் குறித்து தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒரு நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறது.


அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்தது. ஆனால் ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று மகாராஷ்டிராவிக்கு வந்த ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. தென் ஆபிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இவர்கள் யாரும்  ஓமைக்கரான் வைரசுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனரா என தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் ஓமைக்ரான் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்? ஏற்கனவே கொரோனாவிற்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின் ,எதிர்ப்பு தன்மை இருக்குமா அல்லது தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் பாதிக்ககூடிய வல்லமை இருக்கின்றதா என உலக நாடுகள் ஆராயத் தொடங்கி இருக்கின்றன.


அதற்கு முன்னதாக ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களது நாடுகளுக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் யாரும் வரவேண்டாம் என விமான சேவையை ரத்து செய்துள்ளது.இப்படியான நிலையில் பொதுமக்களாகிய நாம் எப்போதும் இருப்பது போலவே சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்து பாதுகாப்பாக வெளியில் செல்வது அவசியம். மிக முக்கியமாக வீட்டில் உள்ள பெரியவர்களையும் சிறியவர்களையும் பாதுகாத்தல் நம்முடைய கடமை. நம்மால் மற்றவர்களுக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. மற்றவர்களால் நமக்கும் எந்த பிரச்சினையும் வரவிடாமல் பாதுகாப்பாக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் தருணமாக தற்போது மாறி இருக்கின்றது.

இப்படி ஒரு நிலைமையில் தற்போது நேற்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் "ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரமிது. அந்தந்த மாநில அரசாங்கம் இதுகுறித்து தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஓமைக்ரான் வைரசுக்கு எதிராக போராடக்கூடிய சக்தியை பெற்றது என ரஷ்யா தெரிவித்திருக்கின்றது. தற்போது வரை இந்தியாவில் ஓ மைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட யாரையும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.