
கைப்படாத ரோஜா என கேள்விப்பட்டு இருப்போம். "தண்ணி படாத ஷூ" வை பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம் அல்லவா..? விசிக தலைவர் திருமாவளவன் பாதுகாத்து வரும் அந்த ஷூ பற்றி தான் ஒரு வார காலமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமூகநீதி பற்றி பேசும் திருமா, இரும்பு இருக்கையில் தனது தொண்டர்களின் பேராதரவோடு, அவர்கள் கைகளை பிடித்தவாறு மெல்ல மெல்ல நடந்து வந்து தண்ணீரில் கால் படாமல் அதாவது ஷூ நனையாமல் காரில் நேரடியாக ஏறுகிறார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக "சாமி வருது ...சாமி வருது.. வழியை விடுங்கடா" என்ற பாடலை அந்த வீடியோவுக்கு பொருத்தி அவருடைய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. மற்றொரு பக்கம் சமூகநீதி பேசக்கூடிய இவர் எப்படி நடந்து கொள்கிறார் என கேள்வி கேட்டு பதி விடுகின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் அளவுக்கு பேசும் காட்சியாக மாறிவிட்டது. சரி ஏதோ நடந்துவிட்டது என அப்படியே பெருமூச்சு விடுவதற்குள், இன்னொரு புகைப்படம் அதைவிட வேகமாக பரவி வருகிறது.
அதாவது திருமா இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, அவருடைய ஷூ தரையில் படாதவாறு செய்தித்தாள் மீது தன் காலை வைத்து உள்ளார். இதற்கு முன்பாக வெளியான வீடியோவில் தண்ணீரில் நனைய கூடாது என்ற ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் தரையில் கூட படாதவாறு பேப்பர் மீது கால் வைத்து உள்ளாரே... என்னவா இருக்கும் என பலரும் கேள்வி கேட்க தொடங்கியதுடன் ஒவ்வொருத்தரும் அவர்களுக்கு மனதில் உதிக்கும் வசனங்களை போட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவேளை அந்த ஷூவுக்கு தண்ணில கண்டமா ? இல்லை தரையில் கண்டமா? இல்லையென்றால் யாராவது முக்கிய நபர் அந்த ஷூவை அவருக்கு பரிசளித்து இருப்பார்களோ? அதுவும் இல்லையென்றால் அந்த ஷூ மிக மிக உயர்ந்த விலையாக இருக்குமோ? அதுவும் இல்லை என்றால் "இந்த ஷூ அணிந்து நீங்கள் செல்லும்போது தண்ணிலும் படக்கூடாது; தரையிலும் படக்கூடாது என யாராவது சவால்விட்டு இருப்பார்களோ? அட அதுவும் இல்லை என்றால் அந்த ஷூ பிய்ந்து விடாமல் சில நாட்கள் உழைக்க வேண்டும் என நினைக்கிறாரோ?
இன்னும் பல கேள்விகளோடு விடை தெரியாமல் அந்த வீடியோவும் இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டும், ஒரு சிலரால் முகநூலில் தாக்கப்பட்டும் வருகிறது. மேலும் அடுத்து எந்த படம் சிக்க போகிறதோ என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், மக்களுக்காக எத்தனையோ நல்ல விஷயத்தை பேசாமல் ஷூ பற்றி பேசி பெரிதாக்குகின்றனரே.. இதெல்லாம் சின்ன பிள்ள தனமா இல்லையா ? என்றும் கேள்வி எழுப்ப, அட போங்கடா... நாட்டில் நல்லது நடக்கும்னு பிரதமர் கூட தான் போராடுறாரு..
அதை எல்லாமா இங்கே விவாதம் பண்றாங்க...சாதிய அரசியல் பேசி மக்களை ஏமாத்துறது மட்டும் நல்லாவா இருக்குன்னு... நெட்டிசன்கள் தங்களுக்குள்ளே மாறி மாறி கருத்து பரிமாறி வருவது மட்டுமல்லாமல், இது என்னமோ கிரிப்டோகரன்சி போலவே ரெகுலேட் பண்ணாமல் இருக்குதுன்னு உள்ளுக்குள்ளேயே குமுறுகின்றனராம். இதற்கெல்லம் ஒரு முடிவு வர, திருமாவே வாய் திறந்தால் தான் பதில் கிடைக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதுவரை நெட்டிசன்கள் பொறுத்திருப்பார்களா? என்பதை நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
More News From TNNews24