Tamilnadu

JP நட்டா சொல்லியதும் இதைத்தான் இந்துக்கள் ஒன்று சேர போகிறார்கள் "விடியலுக்கு முடியல்" உறுதிபட சொன்ன எழுத்தாளர் !

Jp natta and m k stallin
Jp natta and m k stallin

கடந்த கால நிகழ்வுகள் பலவற்றை உதாரணமாக குறிப்பிட்டு தமிழ் புத்தாண்டு நாட்களை மாற்ற முயல்வதும் இந்துக்களை மதமாற்றம் செய்வதும் ஒன்றுதான் எனவும் நிச்சயம் இந்துக்கள் ஒன்று கூட போகிறார்கள் என உறுதிபட தெரிவித்துள்ளார் எழுத்தாளர் சுந்தரராஜ சோழன். இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தது ஆனால் 2008 ல்தான் மறைந்த முதல்வரும் திமுக தலைவருமான திரு.கருணாநிதி,தை 1 என்கிற மகர மாதத் தலைநாளினை வருடத்தின் துவக்கம் என்றார்.இதை ஏன் இப்போது செய்ய வேண்டும்? தனக்கு முழு மெஜாரிட்டி இருந்த போதெல்லாம் செய்யாத ஒன்றை இப்போதைய சூழலில் செய்ய வேண்டிய காரணம் என்னவென யாருக்கும் புரியவில்லை..

இதில் நான் கருதுவது ஒன்றுதான்,ஜனவரி 1 ந் தேதிக்கு  அணுக்கமாக அதாவது இயேசுவின் விருத்தசேதன திருவிழா நாளுக்கு அருகே,அதே மாதத்தில் தமிழ் புத்தாண்டினை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்த சக்திகளின் வெற்றிதான் 'தை 1' தமிழ்ப் புத்தாண்டு என்ற மாற்றம் தேம்பாவணியில் வீரமாமுனிவர் மார்கழி 25 இயேசு பிறந்தார் என்று எழுதினார்..யோசித்துப் பாருங்கள் டிசம்பர் 25 என்கிற ஆங்கிலத் தேதி அன்று மார்கழி 25 என்கிற தமிழ் தேதி வருமா?

ஆனால் மார்கழி 25 க்கு அடுத்த 5 வது நாளில் தை 1 ம் தேதி வந்துவிடும்..அதாவது,இவர்கள் திரித்த தமிழ்ப் புத்தாண்டு.எப்படி டிசம்பர் 25 க்கு அடுத்து ஜனவரி 1 என்கிற ஆங்கிலப் புத்தாண்டு வருமோ அப்படி. இந்த வளையத்திற்குள்தான் 2004 க்கு மேல் எல்லா மாற்றங்களும் நடந்தது.தை 1 என்கிற மகர மாத முதல்நாள்தான் தமிழர் புத்தாண்டு என்கிற கூற்றினை திமுக மட்டுமல்ல,அதே சமயத்தில் விடுதலைப்புலிகளும் ஏற்றுக் கொண்டது.

ஆனால் திமுகவினை போல இதுதான் தமிழர் புத்தாண்டு என திரிபுவாதம் செய்யவில்லை அவர்கள்.இது வரலாற்றுபூர்வமானது என்றோ? அறிவூர்வமானது என்றோவெல்லாம் விடுதலைப் புலிகள் தரப்பு பேசவில்லை மாறாக வேறொரு கருத்தை முன் வைத்தார்கள்.'தமிழ் தேசம்' என்கிற எங்கள் கருத்துருவாக்கத்தில் இந்துக்கள்,கிருஸ்தவர்கள், பௌத்தர்கள் என எல்லோரும் இந்த கட்டமைப்பிற்குள் உள்ளார்கள்.

ஆகவே,இந்துக்களின் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை 1 என்கிற மேஷ மாதத்தை கொண்டாடினால் அது மதசார்பற்ற தன்மைக்கு விரோதமாக போகும்.இது எங்கள் தமிழ் தேசக் கொள்கையை பிளவு செய்யும் என்று சொல்லியுள்ளார்கள்.

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது Secular புத்தாண்டு என்பதே அவர்களின் வியூகம்.இதை விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக கொண்டாடினார்களா? என்று தெரியவில்லை.ஆனால்,2008 ல் திமுக அரசு இதை அறிவித்த போது விடுதலைப்புலிகளும் அப்படிப்பட்ட அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.ஆனால்,இதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை..

ஒன்று தெளிவு,ஏன் தமிழ்ப்புத்தாண்டை மாற்ற வேண்டும் என்றால்? அது இந்துக்களின் புனிதப் பண்டிகையாக இருப்பதால் கிருஸ்த்தவர்களால் கொண்டாட முடியவில்லை.அதன் பிறகு தமிழர்கள் இந்துவாக தன் அடையாளத்தை முன் வைப்பதையும் இவர்கள் விரும்பவில்லை.அது ஒன்றுதான் இதை மாற்றுவதற்கான அடிப்படை நோக்கம் உருவாகும் புள்ளி.

விடுதலைப்புலிகள் தலைவர்,போர் நிறுத்தம் செய்வது கிருஸ்த்துமஸ் - பொங்கல் - தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் என்பதே வரலாறு.அவர்கள் டிசம்பர் 24 தொடங்கி ஏப்ரல் 25 வரை போர் நிறுத்தம் செய்த தரவுகள் உள்ளன.அதே போல இலங்கை ராணுவம் போர் நிறுத்தம் அறிவிப்பது சிங்கள & தமிழ் புத்தாண்டிலேயே.அதாவது,ஏப்ரல் 13 & ஏப்ரல் 14 ஆகிய நாட்கள்.ஆனால் 2008 ம் வருடம் திமுகவை போல LTTE யும் தமிழ்புத்தாண்டை மாற்றி அறிவித்துள்ளார்கள்.நிற்க.

|| திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம் || - நக்கீரர்

ஆட்டை(மேஷத்தை) முதலாக கொண்டு உலகம் இயங்குகிறது என்பதாக சொல்லும் சங்கப்பாடல் மேலுள்ளது.மேஷராசியில் சூரியன் நுழையும் இளவேனிற் காலமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதம்.மீனராசியில் சூரியன் வரும் பங்குனி மாதத்தோடு வருடம் முடிவடைந்துவிடுகிறது.சூரிய கால கணக்கீடையே நாம் பின்பற்றி வருகிறோம்.இதை பின்பற்றுகிற எல்லா சமூகங்களும் சித்திரையைத்தான் முதல்நாளாக கொண்டாடும்..

மகர ராசிக்குள் சூரியன் நுழைகிற உத்தராயண புண்யகால சடங்கினை புத்தாண்டு என்று திரிப்பது,அதே வரிசையில் திருவள்ளுவர் பிறந்த நாளான வைகாசி அனுஷத்தை மாற்றி பொங்கல் விழாவோடு இணைத்தது,என எல்லாமே நமது பண்பாட்டினை அழிக்கும் முயற்சியே ஆகும்.நமது மரபென்ற வேரினை வெட்டி வீசும் நிகழ்வே இவை எல்லாம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் திடிரென்று நடக்கவில்லை..// நடராஜர்தான் இயேசு,திருவள்ளுவர் தோமாவிடம் ஞானஸ்நானம் பெற்றார்,ராமர் பாலத்தின் பெயர் ஆதாம் பாலம்,ஏவாள் என்கிற பெயர்தான் ஔவையார்,தமிழனுக்கு மதமில்லை,தமிழன் இந்து இல்லை //இவை எல்லாமே ஒரே மூலத்திலிருந்து வரும் பலவகை உருட்டுகளே.

தமிழ்ப் புத்தாண்டின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல் நேரடியாக இந்துக்களின் மீதும்,நமது கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலே.திமுக தமிழர் பண்டிகைகளை மாற்ற முயல்கிறது என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டது இதைத்தான்.

மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழறிஞர்கள் ஒன்று கூடி தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்பதை அறிவித்தார்கள் அதையே நாங்கள் அமல்படுத்தினோம் என காயிதே மில்லத் கனவில் வந்தார் கதையையே இப்போதும் சொன்னால் அதை கேட்க யாரும் தயாரில்லை.

தன் கடந்த கால தவறுகளை உணராமல்,மீண்டும் தை 1 என்கிற மகர மாதத்தின் தலைநாளை புத்தாண்டாக அறிவித்தால் அதற்கான எதிர்வினையை தமிழ் இந்துக்கள் ஒருங்கிணைந்து தருவார்கள் என்பதே எதார்த்தம்.ஒரு இந்துவை மதம் மாறுங்கள் என்று சொல்வதும் தமிழ்ப்புத்தாண்டை மாற்றிக்கொள்ளுங்கள் என்பதும் ஒன்றுதான். சித்திரை 1 என்கிற மேஷ மாத தலைநாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார் சுந்தரராஜ சோழன்.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.