24 special

அந்த கெத்துதான் அஜித் தோவல்!

ajit doval
ajit doval

அஜித் தோவல் என்பவர் இந்திய பிரதமரின் ஐந்தாவது மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்! 1968 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தனது காவல் அதிகாரியின் பயணத்தை தொடங்கிய தோவல் மிஸ்ரோ மற்றும் பஞ்சாபில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1999இல் காந்தஹாரில் கடத்தப்பட்ட IC 914 இல் இருந்து பயணிகளை விடுவிப்பதில் முதல் மூன்று ரேங்கில் ஒருவராக முக்கிய பங்காற்றினார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் தலைமுறைவாக இருந்து 7 ஆண்டுகள் செயல்பட்ட தீவிரவாத குழுக்கள் பற்றிய உளவு தகவல்களையும் தோவல் சேகரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 1984 இல் காலிஸ்தானில் காலஸ்தானி தீவிரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் உலக தகவல்களை சேகரிப்பதிலும் முக்கிய பங்காற்றி உள்ளார் மற்றும் 1990 இல் காஷ்மீருக்கு சென்று ஆர் கோட் தீவிரவாதிகளையும் துருப்புகளையும் எதிர் கிளர்ச்சியாளர்களாக மாற்றி ஜம்மு, காஷ்மீர் தேர்தலுக்கு வழிவகை செய்திருந்தார்.


இப்படி தனது தொழில் வாழ்க்கை முழுவதுமே தீவிரவாதிகளை எதிர்த்தும் தீவிரவாதத்தை எதிர்த்து வந்த அஜித் உளவுத்துறை பயனகத்துடன் IB செயலில் உள்ள புலனாய்வு அதிகாரியாகவும் கழித்தார். இதனால் பல விருதுகளையும் கௌரவங்களையும் மேல் பதவிகளையும் பெற்ற தோவல் போர்குணம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இதனை அடுத்து 2009 இல் ஓய்வு பெற்ற தோவல் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் நிறுவனர் இயக்குனர் ஆனார். இருப்பினும் 2014ல் ஈராக்கின் திக்ரித்தில் உள்ள மருத்துவமனையில் சிக்கி இருந்த 46 இந்திய செவிலியர்களின் விடுதலையையும் உறுதி செய்ததோடு செவிலியர்களை அங்கிருந்து மீட்டு வந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தார்.

அதுமட்டுமின்றி மியான்மரில் இருந்து செயல்படும் நாகலாந்தின் தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் போராளிகளுக்கு எதிராக இந்திய ராணுவ தளபதி ஜெனரல் தல்வீர் சிங் சுகாக் உடன் இணைந்து மியான்மரில் ஒரு வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கும் தலைமை தாங்கியுள்ளார் அஜித் தோவல்! இத்தனை குண நலனங்களையும் ராணுவ அனுபவங்களையும் புலனாய்வுத் திறனையும் தீவிரவாதிகளை எதிர்த்து வந்த அஜித் தோவல் 2014 இல் பாஜக தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திய நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.2019 ஆண்டிலும்  இவர் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது ஆட்சியிலும் கேபினட் அந்தஸ்தை பெற்றிருந்தார். அதுமட்டுமின்றி அஜித் தோவலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நெருங்கியவர்களாக அறியப்படுகிறது, மேலும் இந்த அஜித் தோவலுடன் பணியாற்றியவரே தமிழக ஆளுநர் ஆர் என் ரவி என்றும் கூறப்படுகிறது.

காவல் அதிகாரியாக பணியமறுத்தப்பட்ட நாளிலிருந்து ஓய்வு பெற்ற நாள் வரையும் ஏன் ஓய்வு பெற்ற பிறகு இந்நாள் வரையும் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்திய நாட்டை எந்த ஒரு தீவிரவாதியாலும் தீவிர சக்தியாலும் கைப்பற்ற முடியாது என்பதையும் இந்திய மக்களை பாதுகாக்கும் வகையில் தீவிரவாதம் குறித்த உளவு தகவல்களை கண்டறிந்து அவற்றை ஒடுக்கி இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிதும் சேவையாற்றியவர் அஜித் தோவல் இவருடன் தமிழக ஆளுநர் பணியாற்றியுள்ளார், அதனால் தமிழக உள்ளிட்ட இந்தியா முழுவதும் தீவிரவாதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருப்பதால் பாதுகாப்பு ஊடுருவல் போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கிறது என்றும், இவர்கள் வந்து தீவிரவாத அச்சுறுத்தலையை நொறுக்கி விட்டனர் இந்தியாவில் தற்பொழுது தீவிரவாதம் அச்சுறுத்தலே இல்லை என்ற நிலைமைக்கு இவர்கள் கொண்டு வந்து விட்டனர் என பத்திரிக்கையாளர் மணி கூறியுள்ளார். இப்படி இவர் கூறியது பாஜக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டதை குறித்துதான் என கமெண்டுகள் இணையத்தில் வைரலாகிறது...