24 special

அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பண்ணலாமா! சிக்கிய ரோஜா!

mla roja
mla roja

ரோஜா செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நடிகை.... இதனை தொடர்ந்து அதே ஆண்டில் சூரியன் என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். மேலும் உழைப்பாளி, அதிரடிப்படை, இந்து,.வீரா, சரிகமபத நீ, எங்கிருந்தோ வந்தான், ராஜ முத்திரை, வள்ளல், பாசமுள்ள பாண்டியரே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என் ஆச ராசாவே என்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். 1992 முதல் 2000 வரை கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக  ரஜினிகாந்த், சரத்குமார்,. கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். அதற்குப் பிறகு காவலன் மற்றும் சகுனி போன்ற படங்களில் அம்மா கேரக்டரை தாங்கி நடித்த நடிகை ரோஜா 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். 


அதுமட்டுமின்றி இவரது நடிப்பை பாராட்டி நந்தி விருது மற்றும் தமிழக அரசு திரைப்பட விருதும் வழங்கப்பட்டுள்ளது. அரசியலில் நுழைந்த பிறகு நடிகை ரோஜா இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும் திரைப்படத் துறையை விட்டு முழுவதுமாக விலகுவதாக ரோஜா அறிவித்து இனி எந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். முன்னதாக தமிழ் திரையுலகில் பிரபலமாக அறியப்படும் இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முழு நேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த நடிகை ரோஜா தற்போது  ஆந்திராவை ஆண்டு கொண்டுவரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். முன்னதாக இவரது கணவர் தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனராக இருந்தும் தனது மனைவியின் அரசியல் வாழ்க்கையில் அவர் உறுதுணையாக இருக்கிறாரே தவிர நேரடியாக தலையிடுவதில்லை.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணியும் ஆந்திர அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.. இந்த செய்தியே ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது 2024 ஆம் ஆண்டான புத்தாண்டு பிறந்து மூன்று நாள் ஆகியுள்ளது இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட ஆந்திரா எம்பி ரோஜா செல்வமணி பெங்களூருவில் உள்ள பப்பில் இரவு நேரத்தில் நடனமாடி தனது புத்தாண்டை கொண்டாடி உள்ளார், தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் மறந்து சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதையும் மறந்து மிகவும் உற்சாகமாக நடனத்தில் மூழ்கி ஆந்திரா எம்பி ரோஜா ஆடி இருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. 

முன்னதாக சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக குச்சிப்புடி கற்று நடனமாடியவர் ரோஜா ஒருவேளை 2024 ஆம் ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்தில் பழைய ஞாபகங்கள் வந்து இது போன்ற ஒரு ஆட்டத்தை ஒரு ஆடி இருக்கலாம் என்றும் ஆட்சியில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடலாமா என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இவரது வீடியோவை பார்த்து அவருடைய சொந்த கட்சியினரே அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒரு மதிக்கத்தக்க பெண் அமைச்சர் தன்னுடைய பதவியை மறந்து இப்படி நடனமாடலாமா என்றும் வேறு சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் ரோஜா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.