24 special

அப்படித்தான் "வா போ" என்று பேசுவேன் வெளுத்து எடுத்த ஸ்ரீராம் கதறிய ஆவுடையப்பன் !

sriram and avudaiyappan
sriram and avudaiyappan

தமிழகத்தில் யூடுப்பில் விவாதம் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களில் ஒருவரான ஆவுடையப்பன் சக நிகழ்ச்சி பங்கேற்பாளரின் எதிர்ப்பை நேரலையில் பெற்றதும், சக பங்கேற்பாளர் ஒருமையில் பேசும் போது கண்டும் காணமல் இருந்த காரணத்தால் எதிர்ப்பை பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.


தனியார் ஊடகத்தில் வட இந்தியாவில் நடைபெறும் கோவில்கள் மீட்பு நிகழ்வு குறித்து விவாதம் நடைபெற்றது அப்போது பேசிய ஒருவர் அவன் இவன் ஒருமையில் பேசினார் இதனை நெறியாளர் ஆவுடையப்பன் கண்டும் காணாமல் இருந்தார் இந்த சூழலில் தனது கருத்தை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீராம் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் பல இடங்களில் ஆவுடைப்பன் குறுக்கிட பொறுத்து பார்த்த ஸ்ரீராம் ஆவுடையப்பனை வா போ என விளாசி விட்டார், அப்போது ஒருமையில் பேசினால் நீங்கள் போகலாம் என ஆவுடையப்பன் ஆணவத்துடன் பேச, சக பங்கேறப்பாளர் அவன் இவன் என பேசும் போது என்ன செய்தீர்கள் என கேட்க அவர் பொதுவாக சொன்னார் நீங்கள் என்னை பேசினீர்கள் என சப்பை கட்டு காட்டினார் ஆவுடை.

நீ கேட்கவில்லை என்றால் உன்னை வா - போ என்றுதான் பேசுவேன் நான் என்ன பேச வேண்டும் என நீ எனக்கு கூற வேண்டாம் என அதிரடியாக கருத்து தெரிவித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஸ்ரீராம். ஒரு சார்பாக விவாதத்தை முன்னெடுபவர்களுக்கு ஸ்ரீராம் கொடுத்த பதிலடியாக இது பார்க்க படுகிறது. ஸ்ரீராம் ஆவுடையப்பனுக்கு கொடுத்த பதிலடி வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :-