24 special

"நேற்று மட்டும் இரண்டு" முறை புகார் கொடுத்து இருக்கிறார் என்னதான் நடந்தது பாலசந்தர் கொலையில்!


பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும் சூழலில் இந்து முன்னணியை சேர்ந்த இளங்கோவன் பாலசந்தர் கொலை குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் மேலும் பல்வேறு குற்றசாட்டையும் அவர் தெரிவித்து இருப்பது அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.


இளங்கோவன் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :- பா.ஜ.க பொறுப்பாளர் அதுவும் பட்டியலினத்தை சார்ந்தவர் சென்னையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.இதை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்லும் தமிழக ஊடகங்கள்! 

பா.ஜ.க காரன் செத்தால்,போனது உயிர் இல்லையா? இறந்தவர் மீது 8 வழக்குFIR இருக்கு என போலிஸ் அறிக்கை விடுகிறது.அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கும் அத்தனை பேர் மீதும் தான் வழக்கு இருக்கிறது. இந்த நேரத்தில் இதை காவல்துறை சொல்வது ஏன்?

மடை மாற்றத்தானே!நேற்று மட்டும் 2 முறை கொலை மிரட்டல் வருகிறது என புகார் கொடுத்தும் வாங்க மறுத்தது மட்டுமில்லாமல் உரிய நடவடிக்கைகள் எடுக்காதது காவல் அதிகாரி தவறு தானே மொத்தத்தில் ஒரு இளைஞர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மை.

இந்த படுகொலைக்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எல்லாம் யாருக்கும் நிச்சயம் இருக்காது கொலைகாரனை கட்டி அணைப்பவரிடம் இதை எதிர்ப்பார்ப்பதும் தவறு என குறிப்பிட்டுள்ளார் இளங்கோவன்.