
மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் 900 கோடி ரூபாய் செலவில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை ராமருக்கு கோவில் கட்டும் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020 ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது.அன்றிலிருந்து இரவு பகலாக அதிவேக விரைவில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12 20 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார் என்றும் அவரை தவிர மற்ற மிக முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்புகள் செல்ல உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கிட்டத்தட்ட 8000 அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, தலாய் லாமா போன்றோருக்கும் நடிகர்கள் தரப்பில் அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், நடிகை கங்கனா போன்றவருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் வரிசையிலேயே INDI கூட்டணியில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர் இதில் காங்கிரஸ் மட்டும் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது.
இதற்கிடையிலே அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக புனித நீர் நாட்டில் உள்ள அனைத்து புனித தலங்களில் உள்ள ஆற்று நீர்கள் கலசங்களில் சேர்க்கப்பட்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் பல புனித தலங்களின் புனித நீர் சேகரிக்கப்பட்ட தமிழக பாஜகவால் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் அவர்கள் மூலமாகவே ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவின் அழைப்பிதழ்களும் கொடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் அழைப்பிதழை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிற்கு தமிழக பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்லிட்ட அவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் தரப்பில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அயோத்தி ராமர் கோவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக அழைப்பிதழ் சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் அழைப்பிதழை பார்த்தவுடனே சூப்பர் ஸ்டார் 'நிச்சயமாக நான் வருவேன்! அக்கோவிலின் சிறப்பை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்! மேலும் ராமர் கோவிலுக்கு வருவது என்னுடைய கடமை! வரலாற்று சிறப்புமிக்க கோவிலை நான் பார்த்து தரிசிக்க வேண்டும்' என்று சூப்பர் ஸ்டார் மிக ஆர்வமாக அழைப்பிதழை பார்த்தவுடன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பெறப்படுகிறது. கண்டிப்பாக இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இந்திய வரலாற்றில் இடம் பிடிக்கும் எனவும் தெரிகிறது.