24 special

ஒரு ரூபாய் கூட எடுக்காத கீ.வீரமணி என்ன நடக்கிறது?

k.veeramani,chennaipuyal
k.veeramani,chennaipuyal

கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்க கடலில் உருவான மிக்ஜம் புயலால் சென்னையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் கனமழைக்கு வித்திட்டது கனமழையானது சென்னை முழுவதும் தேங்கும் அளவிற்கு பெய்தது. அதாவது சென்னையில் குறிப்பாக வேளச்சேரி தாம்பரம் முடிச்சூர் மேடவாக்கம் மடிப்பாக்கம் சைதாப்பேட்டை கிண்டி பழைய வண்ணாரப்பேட்டை மணலி அம்பத்தூர் திருவெற்றியூர் போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பையும் சென்னை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கான பாதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த புயலால் ஏற்பட்ட கனமழையானது இரண்டு நாட்கள் நீடித்த நிலையில் மழை என்ற பிறகும் நிவாரண பணிகள் அனைத்தும் சரிவர நடைபெறவில்லை என்றும் நிவாரண பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் தெரிவித்தனர். 


அதற்குப் பிறகு தமிழக அரசு தரப்பில் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு வெளியானது. சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு சாமானிய மக்களையும் தாண்டி திரை உலக பிரபலங்களையும் சின்னத்திரை பிரபலங்களையும் பெரிதும் பாதித்தது ஆனால் அவர்கள் தரப்பிலும் சென்னை மக்களுக்கு வேண்டிய சில உதவிகள் ஆங்காங்கே நடைபெற்றது.

இதற்கிடையில் மழையால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படப்போகிறது என்ற தகவல் முன்கூட்டியே மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவற்றை தமிழக அரசு அலட்சியமாக எடுத்துக் கொண்டதாகவும் சில கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில் தமிழக மக்கள் தமிழக அரசின் மீது பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர் அவை அனைத்தையும் மாற்றுவதற்காக திமுக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசின் அவசர எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்கு அறிவித்தது. அடுத்ததாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 6000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாசன பயிர் ஹெக்டே ஒன்றுக்கு 17,000 ரூபாய், மழை வெள்ளத்தில் உயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 8,000 எருது மற்றும் பசு போன்ற கால்நடைகளின் உயிர் இழப்பிற்கும் நிவாரண மற்றும் சேதமடைந்த படகுகளுக்கும் நிவாரணம் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகைகள் அனைத்தும் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தையும் சென்னை மக்களின் நிவாரண பொருட்களுக்காக வழங்கியுள்ளனர். அரசு தரப்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேலையில் தமிழக பாஜக தரப்பில் அதிரடியான பல நிவாரண உதவிகள் மக்களுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலே நிவாரண பொருட்கள் குவிந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது மேலும் ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்க பட்டு அவர்களுக்கு உணவுகளும் வழங்கப்பட்டிருக்கிறது பல உதவிகள் செய்யப்படுகிறது நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என ஒவ்வொரு கட்சியினரும் தன் தரப்பிற்கு உதவிகளை செய்து வரும் நிலையில் ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி எதுவும் செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

மேலும் அவர் வெள்ளத்திற்கும் நிவாரண தொகை கொடுக்கவில்லை எனவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இது தொடர்பாக திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி தரப்பில் விளக்கம் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.