இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி அம்பேத்கரின் கனவுகளை நினைவாக்கி வருவதாக பாராட்டு தெரிவித்து புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதி இருந்தார், அதில் பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி மிகவும் ஆழமாக கருத்து தெரிவித்து இருந்தார் இளையராஜா.
இதற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பக்கத்தில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள், பதிலடிகள் வந்தவண்ணம் உள்ளன, இளையராஜாவும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் திமுகவினர் யாரும் இளையராஜா குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக உதயநிதி தெரிவித்து இருந்தார்.
பாஜக தேசிய தலைவர் நட்டா இளையராஜாவை விமர்சனம் செய்பவர்களை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார், ஒரு பக்கம் இளையராஜாவை விமர்சனம் செய்வது தொடர்கதையாக மாறியுள்ள நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் அமீர் இளையராஜாவை விமர்சனம் செய்து இருந்தார்.
இளையராஜா செய்தது வரலாற்று தவறு எனவும் அமீர் குறிப்பிட்டு இருந்தார் இந்த சூழலில் அமீர் இளையராஜாவை விமர்சனம் செய்ய பழைய சம்பவம் ஒன்று இருக்கிறது, பருத்தி வீரன் படத்தில் இது அறியாத மனது புரியாத வயது என்ற பாடலில் இளையராஜாவை வேறு விதமாக பாட சொல்லி கேட்டார், அப்போது பொறுமையாக கேட்ட இளையராஜா பாடலில் ஏற்றம் இறக்கம் வேண்டும் இல்லை என்றால் மெட்டு வராது என சொன்னார் ஆனால் அமீர் கேட்கவில்லை அப்போது எங்கே நீ வந்து பாடு என மூஞ்சியில் அடித்தது போன்று கூறிவிட்டார்.
இதை மனதில் வைத்தே அமீர் தற்போது இளையராஜாவை விமர்சனம் செய்து இருக்கலாம் என இளையராஜா ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்கின்றனர், மறு பக்கம் ஆட்டு குட்டியுடன் உடலுறவு கொள்வதில் என்ன தவறு என கேட்ட நபர் அமீர் இவரெல்லாம் ஒரு மனிதர் என இளையராஜா விவகாரத்தில் கருத்து சொல்வது தான் இந்த ஆண்டின் மிக பெரிய நகைச்சுவை என பாஜகவினர் கிண்டல் அடிக்கின்றனர்.அமீர் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :-