தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சட்டசபை தேர்தல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தேர்தல்கள் நவம்பர் 7ம் தேதி மற்றும் நவம்பர் 17ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் வரும் நவம்பர் 7ம் தேதி அன்றும், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி அன்றும், வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான காலம் நவம்பர் 2ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 23ம் தேதியும், வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான காலம் நவம்பர் 2ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30ம் தேதி அன்றும் தேர்தல் நடைபெறுகிறது.
ஐந்து மாநில தேர்தல்கள் முடிவுகள் டிசம்பர் 3ல் வெளியாகும். இது குறித்து பாஜக மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, தேர்தல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 5 மாநிலத்திலும் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுயிருப்பது: "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாஜக அர்ப்பணிப்புடன் செயல்படும்" என்று கூறியிருந்தார்.இவரை தொடர்ந்து மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு தெரிவித்தது: "மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள் நலன், நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவை பா.ஜ.க. ஆட்சியின் தனிச்சிறப்பாகும். இந்த மாநில மக்கள், பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை அளித்து ஆசீர்வதிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும் தனது எக்ஸ் தளத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். அவர் தனது பதிவில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மக்களிடம் பாஜக தொடர்ந்து அன்பை பெற்று வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் மீது மத்தியப் பிரதேசம் நம்பிக்கை கொண்டுள்ளது. தாமரை (பாஜக சின்னம்) மூலம் மட்டுமே மத்திய பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை அம்மாநில வாக்காளர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே இந்த முறை தீபாவளி தாமரைக்காக இருக்கும்" என்று சவுகான் தனது பதிவில் கூறியுள்ளார்.