24 special

திமுகவிற்கு பெரும் இடியாய் வரும் செய்தி செய்தி...! ஜெகத்ரட்சகன் அம்போதான்..?

jagathrakshakan, senthil balaji
jagathrakshakan, senthil balaji

ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், சாராய ஆலைகள், கல்வி நிறுவனங்கள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வந்த நிலையில் தற்போது 5 வது நாளாக சிக்கிய ஆவணங்கள் ஜெகத் ரட்சகன் செந்தில் பாலாஜி போன்றே கைது செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது.இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற நான்காவது சோதனையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சென்றனர்.அண்ணா நகர் 5ஆவது பிரதான சாலை, Hபிளாக், எண்: 71ல் ஜெகத்ரட்சகனின் உறவினரான பாலசுப்பிரமணியம் ஜெயா மற்றும் குப்புசாமி ஆகியோர்கள் இணைந்து நடத்தி வரும் பரணி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் அலுவலகத்திலும் பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் நடந்து வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது.


சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனைகளில் மேலும் 2.50 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே 1.50 கோடி ரூபாய் சிக்கிய நிலையில் இந்த தகவலை வருமானவரி துறையினர் தெரிவித்துள்ளனர்.ஜகத் ரட்சகனுக்கு தொடர்புடைய மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான பிணவரையில் 21 பெரிய மூட்டைகளில் கட்டு கட்டாக குவியல் குவிலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியை போன்றே ஜெகத்ரட்சகன் கைது செய்யப்படலாம் எனவும் அவர் மட்டுமின்றி அவரது மருமகன் மட்டும் பல்வேறு முக்கிய நபர்களும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவரையே தற்போது வரை ஆளும் கட்சியான திமுகவால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை இந்த சூழலில் திமுகவின் கருவூலம் என அழைக்கப்படும் ஜெகத் ரட்சகன் கைது செய்யப்பட்டால் திமுகவிற்கு குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் இடியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.