
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பு பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலால் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 17 பேர் காயமடைந்தனர். அதுமட்டுமில்லாமல் தீவிரவாதிகள் மதத்தைக் கேட்டு அதன் பின் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.. மேலும் இந்தியா எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமில்லாமல் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க பைசரன், பஹல்காம், அனந்த்நாக் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காமிங் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பின் தீவிரவாதிகளுக்கு குறி வைத் து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் குல்காமில் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.
வடக்கு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இரண்டு முதல் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் சர்ஜீவன் வழியாக பாரமுல்லாவில் உள்ள யூரி நாலாவுக்குள் ஊடுருவ முயன்றபோது இந்திய இராணுவ படைகள் அவர்களை வழியிலே அடித்து விரட்டியுளார்கள். மேலும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் வீழ்த்தியுளார்கள் நமது இராணுவப்படை. தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஏப்ரல் 23-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். இந்த வழியாக உரிய ஒப்புதலுடன் இந்தியா வந்தவர்கள் மே 1-ஆம் தேதிக்குள் உடனடியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும்.
சார்க் (SVES) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இனி இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு SVES விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும். அதேபோல, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு, கடற்படை, விமான ஆலோசகர்களை திரும்பப் பெறவுள்ளது.மே 1-ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 55-லிருந்து 30-ஆகக் குறைக்கப்படும். என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, இதனிடையே முப்படைகளையும் தயாராக இருக்கும்படி கட்டளையிட்டுள்ளதால் எந்த நேரத்திலும் பாகிஸ்தானை தாக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.