
கடந்த 4 மாதம் முன்பே அண்ணாமலை அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் சிறை செல்வார் எனவும் அவர் ஜாமின் அமைச்சர் எனவும் குறிப்பிட்டு பேசி இருந்தார் மேலும் வழக்கின் தன்மை குறித்தும் பேசி இருந்தார் இந்த சூழலில் இதற்கு பதில் கொடுத்த செந்தில் பாலாஜி அண்ணாமலையை பப்பூன் என விமர்சனம் செய்தார் இந்த சூழலில் தான் இன்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை முடித்து வைத்து இருக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சாட்சிகளை செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுத்து மிக பெரிய தவறு செய்துவிட்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போது இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்து, திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.மேலும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
இந்த சூழலில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்து இருப்பதாகவும் அவரும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தத்தில் சவால் விட்ட செந்தில் பாலாஜி மண்ணை கவ்வி அமைச்சர் பதவியை இழந்து இருக்கிறார்.