
உலகில் உள்ள பல அதிசயங்களில் ஒன்றாக இருப்பது தான் இமயமலை! மேலும் அது இந்தியாவில் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. மற்ற நாடுகளை வைத்துப் பார்க்கையில் இந்தியாவில் மட்டும் தான் சரியான கால நேரங்களும் இயங்கி வருகிறது. 24 மணி நேரங்களில் 12 மணி நேரம் பகலாகவும் மற்ற 12 மணி நேரம் இரவாகவும் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மட்டுமே மிகவும் சரியாக இயக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் எந்த ஒரு அந்நிய சக்திகளும் நம் நாட்டிற்குள் வர முடியாத அளவிற்கு இதனுடைய அமைப்பு அமைந்துள்ளது. ஏனென்றால் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டதாகவும் ஒரு பகுதி மட்டுமே நிலத்தால் சூழப்பட்டதாகவும் அமைந்திருப்பது என்பது தனிச்சிறப்பாகவே உள்ளது. பொதுவாக இமயமலை என்பது அனைவரின் கனவாகவும் செல்ல வேண்டும் என்ற ஆசையாகவும் இருக்கும் ஒரு இடமாகும். அங்கு அதிக அளவில் பனிகள் நிறைந்து இருக்கும் என்பதால் அனைவரும் செல்ல வேண்டும் என்று அதிகம் ஆசை கொள்கின்றனர்.
நாம் சாதாரணமாக பார்க்கும் உலகத்திற்கும் இமய மலைக்கு சென்று அங்கு அனுபவிக்கும் ஒரு வாழ்க்கையும் மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே அமைந்திருக்கும். உலகில் அமைந்திருக்கும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை என்றால் அது இமயமலை மட்டுமே!! அந்த அளவிற்கு மிகவும் பெரியதாக இருக்கும். இமயமலையில் பகுதியானது ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து இந்தியா, பாகிஸ்தான், நேபால், பூட்டான் மற்றும் சைனா போன்ற இடங்களில் பரவி உள்ளது. மேலும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இந்த இமயமலையை மிகப்பெரிய பாதுகாப்பாகவும் அமைந்திருக்கிறது என்பது வியக்கக்கூடிய ஒரு விஷயமாகவே அமைந்துள்ளது. மேலும் இமயமலையானது 15 பனிப்பாறைகளால் உருவாகியுள்ளது. மேலும் அதில் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் சுத்தமான நீர் அமைந்துள்ளது என்பதை அறிஞர்கள் பலர் ஆராய்ந்து கூறியுள்ளனர். மேலும் பல அதிசயங்களை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே தான் வருகின்றனர். ஆனால் தற்போது இந்த இமயமலையில் 89 சதவீதமானது பணிப்பாறைகளால் விரிவடைந்து முன் இல்லாதது போல் மாறி வருகிறது என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் எடுத்த புகைப்படத்துடன் கூடிய விளக்கத்தை தற்போது கூறியுள்ளது. அதில் இஸ்ரோ கூறியிருப்பது என்னவென்றால்...
புதிய ஏரிகள் உருவாவதற்கும், ஏற்கனவே இமயமலை பகுதிகளில் உள்ள ஏரிகள் விரிவடைவதற்கும் இந்த பனிப்பாறை விரிவடைதல் என்பது பெரும் பங்கு வகிக்கிறது என்றும் இந்த ஏரிகள் உருவாவது நன்னீர் ஆதாரங்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால் இவ்வாறு அதிக அளவில் நடக்கும் பொழுது கீழ்நோக்கி பாயும் தண்ணீர் ஆனது வெள்ளம் ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் 89 சதவீத ஏரிகள் இரண்டு மடங்குகளாக விரிவடைந்து வருகிறது. விரிவடைந்து வரும் ஏரிகளில் அதிக அளவில் மொரெய்ன், அரிப்பு, பனி மற்றும் பிற அணையில் ஏரிகள் உள்ளது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4068 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கெபாங் காட் பனிப்பாறை ஏரியானது மிகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் 1989 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலும் 36.42 ஹெக்டேரில் இருந்து தற்போது 101. 30 ஹெக்டேவாக 178 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது என்று இஸ்ரோ தனது ஆய்வில் கூறியுள்ளது. இவர் தொடர்ந்து இனிப்பாறைகள் விரிவடைந்து அதனால் ஏரிகள் உருவாவதனால் அங்கு அதிக அளவில் திடீரென்று வெள்ளம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் இஸ்ரோ கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது!!!