
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் தற்போது புதிய படத்தை விட ரீ ரிலீஸ் படத்திற்கு வரவேற்பு மக்களிடம் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் ரீ ரிலீஸ் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் நாளை வெளியாகும் ரத்தினம் படத்திற்கு மக்களை தியேட்டருக்கு வரவழைக்க படக்குழுவினர் செய்யும் செய்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்தை வைத்து இயக்குநராக அறிமுகமானவர் ஹரி. சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்க ஆரம்பித்தார். ஆக்ஷன் படத்தை இயக்குவதில் கை தேர்ந்தவர் ஹரி. சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்த்தவர் இயக்குனர் ஹரி. இந்நிலையில், நடிகர் விஷால் உடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். விஷால், சமுத்திரக்கனி பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரத்தினம் நாளை இந்த படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
கடந்த சில மாதங்களாக வெளியான திரைப்படங்கள் பெரியதாக மக்கள் இடத்தில் வசூலை குவிக்காமல் இருந்ததால் தியேட்டர் உரிமையாளர்கள் வாரணம் ஆயிரம், மூனு, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை வெளியிட்டு வசூலை குவித்தனர். அந்த வகையில் விஜய், திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்த கில்லி படம் உலகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்து வருகிறது. நாளை விஷால் நடிப்பில் வெளியாகும் ரத்தினம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இணையத்திலும் புக்கிங்க் ஆகாமல் இருந்து வருகிறது.
படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பே, ரத்தினம் படக்குழுவினர் படத்தினை புரமோட் செய்ய தீவிரம் காட்ட தொடங்கினர். அதாவது படக்குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று படத்தினை புரமோட் செய்து வருகின்றனர். ஆனால், அந்த படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் எந்தவொரு புரமோஷனிலும் பங்கேற்கவில்லை என ரசிகர்கள் அப்செட் அடைந்துள்ளனர். இந்த புரமோஷனில் விஷால் தனது 2026 அரசியல் வாழ்கை குறித்தும் பேசி வருகிறார். இந்த நிலையில் இதுவரை இயக்குனர்கள் யாரும் செய்யாத அளவிற்கு ஹரி புரமோஷனில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, ரத்தினம் படத்தை மக்கள் தியேட்டரில் பார்க்க வாங்க என தியேட்டர்களுக்கு சென்றும், தெருத்தெருவா சென்றும் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார் ஹரி. சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் ஹரி கில்லி படத்தின் ரீ ரிலீஸுக்கு வந்த கூட்டம் கூட சென்னையில் ஓட்டுப் போட வரவில்லை என பேசியிருந்தார். இந்நிலையில், அதே நிலைமை ஹரியின் ரத்னம் படத்துக்கும் ஆகி விடுமா இந்த வாரம் விஷாலாவது தமிழ் சினிமாவை காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.