24 special

மே ஐ கம் இன்! - கையில் ஆதாரத்துடன் அடுத்த திமுக அமைச்சரே நோக்கி வரும் அமலாக்கத்துறை...!

Anith radhakrishnan, enforcement
Anith radhakrishnan, enforcement

அமலாக்கத்துறை தற்பொழுது தமிழகத்தில் பட்டியல் போட்டு ஊழல் புகார்களை தட்டி தூக்கி விசாரித்து வரும் நிலையில் ஏற்கனவே அமலாக்கத்துறை நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது புழல் சிறையில் இருந்து வருகிறார், மேலும் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் அடித்த அதிரடி ரெய்டு மற்றும்  விசாரணையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் அமலாக்கத்துறையால் கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரிக்கப்படுகின்றனர். 


மேலும் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை அடுத்தபடியாக சிறைக்காவல் வரை செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி திமுகவின் இரு முக்கிய அமைச்சர்கள் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் ஆடிப் போயிருக்கும் நிலையில் அடுத்தபடியாக அமலாக்கத்துறை நடவடிக்கை எங்கு இறங்கும் என தெரியாமல் இருந்து வரும் சூழலில் கனிமொழியின் ஆதரவாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்க துறையால் குறிவைக்கப்பட்டுள்ள தகவல் திமுகவை கிடுகிடுக்க வைத்துள்ளது. 

கடந்த 2002-2006 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனைத்து ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான ஆறு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது அமலாக்கத்துறை. 

இந்தநிலையில் தற்போது அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடக்கும் வழக்கு ஒன்றில் மனு தாக்கல் செய்துள்ளது. அனைத்து ராதாகிருஷ்ணனுக்காக எதிரான நிலுவையில் உள்ள சொத்துகுவிப்பு வழக்கில் விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் எங்களுக்கு உதவ வேண்டும் அவர்களுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் என தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று மனு தாக்கல் செய்துள்ளது. 

அதோடு தங்களிடம் முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொத்துகுவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை மனு குறிப்பிட்டுள்ளது. இப்படி அமலாக்கத்துறை பரபரப்பான ஆதாரங்களை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கில் எடுத்து கையோடு வைத்துக்கொண்டு எப்போது இறங்கலாம் என காத்துக் கொண்டிருப்பது அறிவாலய அஸ்திவாரத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது. 

இதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை ஏற்கனவே ஆதாரங்களை கையில் வைத்துள்ளதாக கூறியுள்ளது, செந்தில்பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கை தான் முதலில் நடத்தியது ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் ஆதாரங்களை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் விரைந்து எந்த மாதிரியான நடவடிக்கையிலும் இறங்கலாம் என தெரிகிறது. மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் தென்மாவட்ட முக்கிய திமுக அமைச்சர் என்பதும் எம்.பி கனிமொழியின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே இரு அமைச்சர்கள் அமலாக்க துறை நடவடிக்கையால் ஆடிப் போயிருக்கும் நிலையில் தற்பொழுது அதுவும் குறிப்பாக தெற்கில் முக்கியமாக அமைச்சராக வலம் வரும் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை இறங்குவதன் மூலம் திமுக அஸ்திவாரத்தில் சிறிது ஆட்டம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.