சென்னை : சமீப காலங்களாக ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதித்தும் திரைப்படங்கள் மற்றும் யூட்யூபில் வீடியோக்கள் வெளியிடுவது வாடிக்கையாகி வருவதாக ஹிந்து அமைப்புகள் குரல்கொடுத்து. வருகின்றன. இதனிடையே இடது சாரி சித்தாந்தம் கொண்ட ஒரு யூ ட்யூப் சேனலில் ஹிந்து தெய்வமான தில்லைநடராஜரை கொச்சைப்படுத்தி விஜய் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவுக்கு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்டனக்குரல்கள் எழுப்பிவந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் தமிழக பிஜேபி இதை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் " தமிழக காவல்துறையும் திமுக அரசும் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் செயலை வேடிக்கை பார்ப்பது நியாயமா. ஹிந்து தெய்வங்களை போற்றும் மிகப்பெரும்பான்மை மக்கள் வாழும் தமிழகத்தில் ஹிந்து உணர்வுகளையும் தொன்று தொட்டு இருந்துவரும் ஆன்மீக உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்தும் தீயநோக்கில்,
சமூகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்ற கெட்ட சிந்தனையோடும் சிலர் கெடுமதியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்கடவுள் முருகனை போற்றும் கந்தசஷடி கவசத்தை கேலிசெய்து தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளை வேதனைப்படுத்திய கயவர்கூட்டமான கறுப்பர் கூட்டத்தின் செயல்கள் இன்றும் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாத வடுவாக இருக்கிறது.
யூ டூ ப்ரூட்டஸ் என்ற சேனல் மூலம் மைனர் விஜய் என்பவர் ஹிந்து கடவுள்களை மிக ஆபாசமாக விமர்சித்து வருகிறார்.சமீபத்தில் தில்லைநடராஜர் ஏன் காலைத்தூக்கி ஆடுகிறார் என்று அவர் பேசியுள்ள வீடியோ ஆபாச அருவருப்பின் உச்சக்கட்டம். இதுகுறித்து புகாரளிக்கப்பட்டும் தமிழக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் ஆசியோடுதான் இது நடக்கிறதா என எண்ணத்தோன்றுவது நியாயம்தானே.
மதநல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் யூ டூ ப்ரூட்டஸ் போன்ற சேனல்கள் மீதும் தெய்வங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீதும் காவல்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு இதுபோன்ற கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.