24 special

வெளிவந்த அவசர தகவல்.... அலறியடித்து முதல்வர் செய்த காரியம்!

mk stalin, ponmudi
mk stalin, ponmudi

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கடந்த ஜூன் மாதம் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து I.N.D.I கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் நடத்தி முடித்தது. அதற்குப் பிறகு இதன் இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதத்தில் மும்பையிலும் நடைபெற்றது. அதற்குப் பிறகு 5 மாநிலங்களின் தேர்தல் மும்முரமாக நடைபெற்றதை அடுத்து I.N.D.I கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டது நவம்பர் மாதத்தில் 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்று டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அந்த தேர்தல்களின் முடிவுகள் வெளியான நிலையில் ஐந்து மாநிலங்களின் தேர்தலில் மூன்று மாநிலங்களை பாஜக பெரும்பான்மையான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது I.N.D.I கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.


பாஜகவை வீழ்த்த வேண்டும் எந்த நிலையிலும் பாஜக ஆட்சியைப் பிடித்து விடக்கூடாது என்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்ட I.N.D.I கூட்டணிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனை அடுத்து I.N.D.I  கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜனை கார்கே அறிவித்திருந்தார், இதற்கான கடிதங்களையும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அனுப்பி இருந்தார். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என பரபரப்பு தகவலை தெரிவித்தனர். 

இதற்கு முக்கிய காரணமாக ஐந்து மாநிலங்களின் தேர்தலில் I.N.D.I கூட்டணி சந்தித்த தோல்விக்கு திமுகவின் அமைச்சரும் தமிழக முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சனாதன எதிர்ப்பு கருத்துக்களே!  எனப்படுகிறது. இதனால் திமுகவை I.N.D.I கூட்டணியில் இருந்து நீக்குவதாக இருந்தால் நாங்கள் இந்த கூட்டணியில் இருக்கிறோம் இல்லையெனில் ஆலோசனைக் கூட்டத்தை தவிர்ப்பதோடு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக I.N.D.I கூட்டணியின் தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக I.N.D.I  கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 19ஆம் தேதியான இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆக மொத்தம் திமுக பேசிய பேச்சு தான் ஐந்து மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது இப்படி உதயநிதியின் சனாதன பேச்சு I.N.D.I கூட்டணியின் தோல்விக்கு காரணம் என ஏற்பட்ட நிலையில் அதற்காக I.N.D.I கூட்டணியில் நிலையில் முதல்வர் ஸ்டாலின் I.N.D.I கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இன்று டெல்லி சென்று உள்ளார். இதனால் தன் மகனின் பேச்சிற்காக தான் அப்பாவாகியே ஸ்டாலின் சென்றுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

ஏற்கனவே நம்மால் ஏற்பட்ட சச்சரவுகளால் I.N.D.I கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட இன்று நடைபெற உள்ளது இதற்கும் நாம் செல்லாமல் இருந்தால் மொத்தமாக நம்மளை ஒதுக்கிவிடுவார்கள்! வேறு என்ன செய்வது என புலம்பிக் கொண்டே திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்முடி விவகாரத்தில் அவருக்கு தண்டனையை வழங்க தீர்ப்பு வந்த நிலையில்  அதற்காகவும் முதல்வர் முன்கூட்டியே அறிந்து டெல்லி மேலிடத்தின் முக்கிய புள்ளியிடம் சமாதானம் பேச சென்றுள்ளார் என கூறப்படுகிறது.