24 special

செந்தில்பாலாஜியை சந்திக்க போகும் அமைச்சர் பொன்முடி?...இரண்டு நாட்களில் தமிழக ஆட்சியில் மாற்றம்?

Highcourt, Ponmudi
Highcourt, Ponmudi

2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி இவரது மனைவி விசாலாட்சி இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 75 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வழக்கு வேலூர்  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கவுதசிகாமணி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பல ஆவணங்களும், அவரது மகன் வெளிநாட்டு கரன்சி வைத்திருந்ததன் காரணமாக அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பு அவரிடம் விசாரணையா நடந்தது.

இந்நிலையில் 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐ கோர்ட் கிளைக்கு மாற்றப்பட்டு நீதிபதி  எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21-ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் திமுகவின் அறிவாலயமே திக்குமுக்கி உள்ளது.

இன்னும் இரண்டு நதிகளில் தீபு வழக்கப்படவுள்ளதால், அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவியும், எம்,எல்,ஏ பதவியும் பறிக்கப்படலாம் என்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுக்கு சிறையில் இருக்கலாம் எனவும் மேலும் 6 வருடங்களுக்கு தேர்தலில் ஈடுபட முடியாது எனவும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் சிறைக்கு செல்வது உடுத்தப்பட தெரிகிறது. மேலும் திமுகவை சேர்ந்தவர்கள் சிலர் முதலமைச்சர் ஊரில் இல்லாத போது இந்த மாதிரி பழிவாங்கும் எண்ணத்தில் செய்வதாக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஜூன் மாதம் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொன்முடி சிறையில் சந்திக்க இருக்கிறார் என இணையத்தில் மீம்ஸ் பரவி வருகிறது.

தொடர்ந்து அமைச்சர்கள் சிறைக்கு செல்லும் நிலை வரக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் பொன்முடியும் சிக்கியிருப்பதால் கூடிய விரைவில் மாநில கட்சிகள் தமிழ்நாட்டில் மறைந்து விட்டு தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்த கூடும் எனவும் வரும் நாட்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு சிக்கலாம் எவனும் வேறு பேச்சு அடிபடுகிறது. திமுக ஆட்சிக்கு பெரிய ஆப்பு வரும் மாதங்களில் ஏற்படகூடும் என கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.