24 special

இந்தியர்களை விடுவிக்கவில்லை என்றால்.....கர்த்தாருக்கு இந்தியா வைக்க போகும் செக் இதுதான்!

Pm modi,
Pm modi,


கத்தாரில் கடந்த ஆண்டு உளவு பார்த்ததாக கைது செய்யயப்பட்ட இந்தியர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை அறிவித்தது. இதற்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கத்தார் நாட்டிற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.



தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய கடற்படை வீரர்கள் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இந்தியர்கள் 8 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது. நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது. அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த செய்தி இந்தியர்களிடம் இருந்து கண்டனம் எழுந்தது, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்றும் அவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு திரும்பி கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.


இந்த நிலையில் கத்தாரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தை தான் சந்தித்து பேசியதாகவும், அவர்களை பத்திரமாக இந்திய கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.


ஒருவேளை கத்தார் அரசு இந்தியர்களை விடுவிக்கவில்லை என்றால் எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இருக்கிறது மத்திய அரசு. அதாவது, கத்தாரிடமிருந்து இயற்கை எரிவாயுவை அதிக அளவில் வாங்குகிறோம். இரு கடற்படைகளும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கின்றன. இப்படி இருக்கையில் இந்தியா எரிபொருள் வாங்குவதை நிறுத்திவிட எதிர்பார்க்கிறது.


இதேபோல் தன மலேசியாவின் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அவர் பிரதமராக இருந்தபோது இந்தியா-மலேஷியா நல்லுறவு முறிந்த பொது இந்திய அங்கு இருந்து எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தியது. அப்போது இந்தோனிஷியாவில் இருந்து அதிக விலை கொடுத்து வர்த்தகத்தை இந்தியா தொடங்கியது. 


இந்நிலையில் மலேசியாவின் பொருளாதாரம் மிக பெரிய அளவில் அடிவாங்கியது. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஏனெனில் மலேசியாவின் பொருளாதாரம் என்னை வர்த்தகத்தை கொண்டு தான் இருந்தது. அதிலும் இந்தியா தான் அதிகளவில் இறக்குமதி செய்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் நல்லுறவு தடைப்பட்டதால் மலேஷியா பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது. இதனால்  அப்போது இருந்த பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.


இப்போது கத்தாருக்கும் அதே போல் பிரச்னை தொடங்கியுள்ளது. இந்தியர்களை விடுவிக்கவில்லை என்றால் மலேஷியாவிடம் ஏற்பட்ட பொருளாதார தடை போன்று கர்த்தாருக்கும் நடக்க உள்ளதால். ஒருவேளை கர்த்தார் நாட்டின் பொருளாதாரம் இறங்கினால் பல நாடுகளும் இதன் விளைவுகளை சந்திக்கும் என்பதால்,  முதற்கட்டமாக கர்த்தார் இந்தியர்களை விடுவிக்கும் நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.