தமிழக அமைச்சரின் உறவினரும், முக்கிய வலது கரமாக திகழ்ந்த நபர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை அமைச்சர் தரப்பிற்கு கொடுத்துள்ளது.
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துார், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளரும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் நெருங்கிய உறவினருமான விசாகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க வில் இணைந்தார்.
காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட முத்துார், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் சொந்த ஊர். அந்த ஊரின் தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளராக, அமைச்சரின் உறவினரின் மகன் விசாகன், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார்.
அமைச்சருக்கு அண்ணன் மகன் உறவு முறை உள்ள அவர், நேற்று திடீரென, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.இது, தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முன்பெல்லாம் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவார்கள் இப்போது பாஜகவில் இணைவது தமிழகத்தில் புதிய மாற்றமாக பார்க்க படுகிறது.
அதிலும் ஆட்சியில் உள்ள திமுகவில் இருந்து விலகி அமைச்சரின் வலது கரமாக திகழ்ந்த நபர் பாஜகவில் இணைகிறார் என்பது மிக முக்கிய செய்தியாக பார்க்க படுகிறது, இதற்கு முன்னர் பல்வேறு ஊராட்சி மன்றம் தலைவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.