24 special

ரவுடிகளுக்கு மரண பயத்தைக் காட்டும் பாஜக மேற்கு வங்கத்தில் புதிய அதிரடி ஆட்டம் உள்ளாடைகளுடன் ஊர்வலம் போகும் ரவுடிகள்

PMMODI,MAMTABANARJEE
PMMODI,MAMTABANARJEE

ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் காட்சிகள் மாறும்** என்பார்கள். அதன்படி  உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வந்தபோது ரவுடிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் எதிராக எப்படி "புல்டோசர்" ஆட்சியை நடத்தி வருகிறதோ, அதே அதிரடி பாணியை தற்போது மேற்கு வங்காளத்திலும் கையில் எடுத்துள்ளது பாஜக அரசு.


மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 15 ஆண்டுகால மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அதிரடியாக வீழ்த்தப்பட்டு, முதன்முறையாகப் பெருவாரியான ஆதரவுடன் பாஜக அரசு அரியணை ஏறியுள்ளது. அக்கட்சியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரி, பதவியேற்ற முதல் நாளில் இருந்தே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளார். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, ரவுடிகளை  காவல்துறையினர் உள்ளாடைகளுடன் பொதுவெளியில் அழைத்துச் செல்லும் அதிரடி சம்பவங்கள் தற்போது ஒட்டுமொத்த மாநிலத்திலும் குற்றவாளிகளுக்கு  சிம்மசொப்பனமாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

ஹவுராவின் டாப் மோஸ்ட் குற்றவாளியாகக் கருதப்படும் ஆகாஷ் சிங் மீதான அதிரடி நடவடிக்கையைக் கூறலாம். அப்பகுதியில் மாஃபியா கும்பலை நடத்தி, மிரட்டிப் பணம் பறித்து வந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அதுமட்டுமன்றி, துணிச்சலாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்திய கொடூர பின்னணியும் இவருக்கு உண்டு. இந்த ரவுடி கும்பலின் கொட்டத்தை வேரோடு ஒடுக்க நினைத்த காவல்துறை, தற்போது ஆகாஷ் சிங் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் பழைய வழக்குகளை கையில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது.

அதன்படி, மாலி பஞ்சகரா மற்றும் கோலபாரி காவல் நிலையங்களைச் சேர்ந்த தீரமிக்க போலீசார், ஆகாஷ் சிங்கை விசாரணைக்காகவும், அவர் குற்றம் செய்த இடங்களை அடையாளம் காணவும் துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் நேரடியாக அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையின் போது, ரவுடிகளின் பந்தாவையும் கெத்தையும் மொத்தமாக உடைக்கும் வகையில், ஆகாஷ் சிங் வெறும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்த நிலையில் ஹவுராவின் முக்கிய பொதுப் பகுதிகள் வழியாக போலீசார் முன்னிலையில் நடத்தி அழைத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சிகள் தான் தற்போது இணையத்தை உலுக்கி வருகின்றன.

முன்னதாக இதே போல் மற்றொரு முக்கிய குற்றவாளியும் பொதுவெளியில் உள்ளாடைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் இந்த அதிரடி மற்றும் கடுமையான மனித உரிமை மீறல் நடவடிக்கை குறித்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும், அடுக்கடுக்கான கேள்விகளும் எழுந்தாலும், குற்றவாளிகளுக்கு மரண பயத்தை காட்டும் பாஜக அரசின் இந்த அதிரடி ஆட்டம் மேற்கு வங்கத்தில் ஒரு புதிய பரிமாணத்தையும், ரவுடிகளற்ற புதிய பயணத்தையும் தொடங்கி வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.