24 special

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வில் ஐக்கியம் உடையும் கூட்டணிகள்.. மாறும் கணக்குகள் விரைவில் அரங்கேறும் பிரம்மாண்ட திருப்பம்

VIJAY,EDAPPADIPALANISWAMI
VIJAY,EDAPPADIPALANISWAMI

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அரசியல் மாற்றதிற்கு தயராகி வருகிறது.,குறிப்பா 5 ஆண்டுகள் தவெக கரை சேருமா இல்லை அதற்கு முன்னரே  சட்டமன்றத்  தேர்தல் வருமா என்ற  கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெகவை  நோக்கி ரகசியமாகப் படையெடுக்கத் தொடங்கி உள்ளார்கள். இது  அறிவாலயத்தை மட்டுமல்லாமல் சத்தியமூர்த்தி பவனையும் சேர்த்தே அதிர வைத்திருக்கிறது. ஒருவேளை இடைத்தேர்தல் என்ற ஒன்று வந்து, அதில் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவானால், தங்களை மொத்தமாக கழட்டிவிட்டு விடுவார்களோ என்ற மரண பயத்தில் காங்கிரஸ் மேலிடம் இப்போது கதறத் தொடங்கியிருக்கிறது. , இந்த ஆட்டத்தின் நிஜமான ட்விஸ்ட் காங்கிரசின் பயத்தில் மட்டுமல்ல, விஜய் எதிர்கொள்ளப் போகும் அதே "திராவிட மாடல்" சிக்கலில்தான் ஒளிந்திருக்கிறது.


அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் பெரிய அளவில் அதிரடி காட்டாமல், வெறும் "சட்டப் போராட்டம்" என்று மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. இதேபோன்றதொரு வெடிமருந்துதான் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவின் முல்லைப் பெரியாறு அணை விவகாரமும் ஆகும். அது எப்போது வேண்டுமானாலும் இரு மாநிலங்களுக்கும் இடையே பூதாகரமாக வெடிக்கக் காத்திருக்கிறது. இத்தனை காலமும் திமுகவுக்குப் பெரும் தலைவலியாகவும் நெருக்கடியாகவும் இருந்த இதே நதிநீர்ச் சிக்கல், இப்போது விஜய்யின் கதவையும் பலமாகத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கும் கணக்குகளைப் போட்டுக் கொண்டு, மறுபக்கம் அண்டை மாநில காங்கிரஸ் அரசுகளின் தமிழக விரோதப் போக்கை எப்படி எதிர்ப்பது என்ற தர்மசங்கடத்தில் விஜய் சிக்கியிருப்பதால், விரைவில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்களும், புதிய கூட்டணி கணக்குகளும் தலைகீழாக மாறப் போவது மட்டும் உறுதியாகிவிட்டது.

இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் இப்படி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்க, எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்திருக்கிறது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் அதிரடியான குற்றச்சாட்டு. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வை நோக்கி ரகசியமாக நகர்வதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேரடியாகவே த.வெ.க-வை சாடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து அரசியல் வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அவர் கொளுத்திப் போட்டிருக்கும் வார்த்தைகள், த.வெ.க மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு புதிய மோதல் போக்கை உருவாக்கியிருக்கிறது. இந்த காரசாரமான வார்த்தைப் போர் வெறும் தற்காலிக சலசலப்பு அல்ல, தமிழக அரசியல் வரலாற்றில் மிக விரைவில் அரங்கேறப் போகும் ஒரு பிரம்மாண்ட கூட்டணி உடைவிற்கான அதிகாரப்பூர்வ ஆரம்பப்புள்ளி என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.