24 special

பேசிய மொத்த பேச்சுக்கும் ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..!

Amar Prasad Reddy, PA Ranjith
Amar Prasad Reddy, PA Ranjith

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் விழா நேற்றைய தினம் கோவிலில் பிரதிஷ்டை வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார். ஒட்டுமொத்த திரையுலகத்தை சேர்ந்த முன்ணனி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தொழிலதிபர்களும் பங்கேற்றனர். நேற்று மாலை அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி ராமரை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமிழ் திரையுலக இயக்குனரும் பட்டியலின மக்கள் சேவகருமான பா.ரஞ்சித் பேசியதற்கு ஒரே வார்த்தையில் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 


ரஞ்சித்தின், தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார் இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித், "இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லையென்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயத்தை உணர்த்துகிறது.

அதுபோன்ற காலக்கட்டத்தில் நுழையும் முன்பு நம் மூளையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் தினம் தினம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிற மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் கலை என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மக்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன்". மேலும், "இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. இப்போது கோவில் கூடாது என்பது நம் பிரச்சனை இல்லை. 

ரஜினி ராமர் கோவிலுக்கு சென்றது அவருடைய விருப்பம். டர்பான கருத்துகளை அவர் முன்பே கூறியிருக்கிறார். இப்போது அவருடைய கருத்துப்படி 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது" என்று பேசினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக தேவையில்லாமல் எதற்கு பேசுறீங்க, எதற்காக நெகட்டிவிட்டியை பரப்புறிங்க என்ற கேள்வியையும் இணையத்தில் வைத்துள்ளனர். 

இந்நிலையில் மாநில பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இணையத்தில், 'மூளையற்றவர் பா.ரஞ்சித் மற்றும் அயோத்தி பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. ராமர் இந்தியாவின் பெருமை; அவர் நம் வாழ்க்கை, அவர் நித்தியமானவர், உங்களைப் போன்ற பணம் செலுத்தும் முகவர் எங்கள் நம்பிக்கைகளுக்குள் வரக்கூடாது. தலித் சிறுமியை திமுக நாய் சித்ரவதை செய்யும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார். நீங்கள் ஒரு போலி தலித் செயற்பாட்டாளர்' என பதிவிட்டுள்ளார்.

இணயக்குனர் ரஞ்சித் சினிமாவிலும் பட்டியலின மக்களுக்கு இன்றும் கொடுமை நடப்பதாகவும் அது குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் செய்வது போன்றும் பட்டியலின மக்களுக்கு நங்கள் தான் உறுதுணையாக இருப்போம் என்பது போல் படத்தில் மட்டும் நாடகமாடி வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் தலைமை என்றால் பா.ரஞ்சித் மற்றும் மாறி செல்வராஜ் போன்றவர்கள் பட்டியலின மக்களுக்கு குரல் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால், திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் நடந்தது தொடர்பாக இவர்கள் யாரும் குரல் கொடுக்கலாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.