Cinema

நடிகையின் திருமண வாழ்கை குறித்து சொன்ன பயில்வான் ரங்கநாதன்..!

Ramya krishnan, Bayilvan ranganathan
Ramya krishnan, Bayilvan ranganathan

சினிமாவில் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து பெயர்பெற்றவர் ரம்யா கிருஷ்ணன், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்கை குறித்து அவரே பதிலளித்துள்ளார் என்று பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கன்தான் தெரிவித்த தகவலால் ரசிகர்கள் வியந்து விட்டனர்.


தமிழில் ரஜினிகாந்த், உள்ளிட்ட பல நடிகர்களுடனும் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் குறித்து பல கிசு கிசு தகவல் வந்துள்ளன. ஆனால், இதுவரை ரம்யாகிருஷ்னன் மீது எந் ஒரு புகாரும் வந்ததில்லை. தமிழில் முதன் முதலாக ரஜினிகாந்த் உடன் படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பி மனைவியாக அறிமுகமான ரம்யா கிருஷ்னன் தொடர்ந்து ரஜினியின் படையப்பா படத்தில் ரஜினி நடிப்பிற்கு சவாலாக நீலாம்பரி காதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்திருப்பார் அப்போது சூப்பர் ஸ்டாரை விட நடிகை ரம்யாகிருஷ்னன் அதிகம் பேசப்பட்டார். 

இந்நிலையில், பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்து பேசியுள்ளார். ' ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் உங்க கணவருடன் சேர்ந்து வாழவில்லையா? என்றும் விவாகரத்து ஆகி விட்டதா? என கேட்க கடுப்பான ரம்யா கிருஷ்ணன் நான் என் கணவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். இருவரும் சினிமாவில் பிசியாக இருக்கிறோம். அவர் டோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். நான் தமிழ் மற்றும் தெலுங்கில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறேன் என படாரென பதில் அளித்து அந்த நபரின் வாயையே அடைத்து விட்டார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்ததால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

வளர்ந்து வரும் நடிகரான சிம்புவின் குத்து படத்தில் போட்டு தாக்கு பாடலுக்கு ரசிகர்களை கவரும் விதமாக குத்தாட்டம் போட்டிருப்பார் நடிகை ரம்யாகிருஷ்னன். தெலுங்கில் உருவான பாகுபலி படத்தில் நாசருக்கு மனைவியாகவும் பிரபாஸுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். தமிழில் அம்மன் படத்திற்கு கம்பிரமாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இவரால் மட்டுமே அனைத்து வித நடிப்பையும் வெளிப்படுத்த முடியும் என்று கூறும் அளவிற்கு அனைத்து வித நடிப்பிலும் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வருகிறார். இதுவரை பயில்வான் ரங்கன்தான் நடிகை குறித்து கிசு கிசு மட்டுமே கூறி வந்த நிலையில், தற்போது ரம்யாகிருஷ்ணன் குறித்து நல்ல கருத்தை தெரிவித்திருப்பது ரசிகர்களிடடம் வரவேற்பை பெற்றுள்ளது.