24 special

குறி வைத்த டெல்லி மேலிடம் வசமாக சிக்கிய உதயநிதி

udhayanithi, nirmala sitharaman
udhayanithi, nirmala sitharaman

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சமூகத்தையும் சாராமல் பொதுவாக அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் ஆனால் திமுகவை சேர்ந்த தமிழக முதல்வர் மகனாக இருந்தும் தமிழக அமைச்சரவையின் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தும் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது மட்டுமின்றி சனாதனத்தை ஒழிப்பேன் என கூறி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் மனதளவில் துன்புறுத்தினார். இதற்கு தமிழக மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக வடபகுதிகளில் இருந்து அமைச்சர் உதயநிதிக்கு எதிரான கண்டனங்களும் வழக்குகளும் பதியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உதவியதற்கு உதயநிதியின் கருத்துக்கள் திமுகவின் ஆசை கூட்டணியாக IND கூட்டணியிலும் எதிர்ப்பை பெற்றது திமுக தலைமையை வருத்தத்தில் தள்ளியது. 


இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்த்தது மட்டுமின்றி அயோத்தி ராமர் கோவிலையும் புறக்கணிக்கும் வகையில் ஒரு கருத்தை பதிவிட்டும், தமிழக அரசு அயோத்தியின் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பை ரத்து செய்ததோடு அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெறும் அதே தினத்தன்று தமிழக கோவில்களில் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் மூலம் வாய்மொழி உத்தரவு கொடுத்ததும் தமிழக முழுவதும் எதிர்ப்பை பெற்றது. இதனை மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், மத சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

இப்படி அயோத்தி ராமர் கோவிலை மறைமுமாக திமுக அரசு எதிர்த்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்பொழுது திமுக அரசின் இந்த நடவடிக்கைகளை குறி வைத்து பிஜேபியின் சமூக வலைதள பக்கங்கள் இந்தியா முழுவதும் திமுக அரசை குறிப்பாக அயோத்தி ராமர் கோவில் குறித்து பேசிய உதயநிதியின் கருத்தை முன்வைத்து பிரச்சாரங்களை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே சனாதன விவகாரத்தால் INDI கூட்டணியின் வெற்றியில் பெரிதாக பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இப்படி ராமர் கோவில் விவகாரத்திலும் உதயநிதி வசமாக சிக்கிக்கொண்டார் என்பது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் உதயநிதி அயோத்தி ராமர் கோவில் குறித்து கூறிய கருத்துக்களை ஹிந்தியில் மொழி பெயர்த்து இந்தியா முழுவதும் வெளியிட்டு வருவது உதயநிதியின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.