Tamilnadu

அடித்து சொல்லிய பேராசிரியர் "என்ன கருத்து" சார் பாஜகவினர் மகிழ்ச்சி!

Rama srinivasan
Rama srinivasan

தமிழக பாஜகவில் ஒரு காலத்தில் சித்தாந்த ரீதியாகவும் வரலாற்று குறிப்புகளுடனும் பேசும் தலைவர்களுக்கு பஞ்சம் இருந்தது என்று கூறலாம் ஆனால் தற்போது அந்தகுறையை நீக்க அக்கட்சியில் பல அரசியல் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள் அதில் முக்கியமானவர் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன்.


இவர் பங்கு பெரும் ஊடக விவாத நிகழ்ச்சிகள் பாஜகவினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் பெரியார் பேசிய பேச்சுக்களை விவாத நிகழ்ச்சியில் எடுத்து காட்டுகளுடன் குறிப்பிட்டது மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு பாரத ரத்னா பாஜக கொடுக்க போவதாக சிலர் காலம் காலமாக சொல்லி வரும் பொய் புகார்களுக்கு பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் கொடுத்த விளக்கம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் காந்தியை பற்றி குறிப்புடன் சங்கம் தொடங்கும்.

அப்படி பற்ற நாங்கள் எப்படி காந்தியை கொலைசெய்தவருக்கு பாரத ரத்னா கொடுப்போம் மேலும் "ஆர்.எஸ்.எஸ்" மீது காந்தி கொலையை முடிச்சு போடுகிறவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீதிமன்றமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் காந்தி கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தீர்ப்பு கொடுத்துள்ளது என அவர் பேசிய பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் என்றால் திருக்குறள் உலக பொது முறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உண்மையில் திருக்குறளில் குறிப்பிட்டது போன்று வாழும் ஒரே சமூகம் இந்து சமுதாயம் தான் திருக்குறளில் குறிப்பிட்டது அனைத்தும் இந்துத்துவ கருத்துக்கள்தான் அது முழுக்க முழுக்க இந்துக்களுக்கான நூல் என கூறி எடுத்து காட்டாக பல்வேறு விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ கடும் வைரலாக பரவி வருவதுடன் பேசு பொருளாகவும் மாறியுள்ளது விரைவில் திருக்குறள் இந்து "நூலா"அல்லது "உலக பொதுமறையா" என விவாதம் நடத்தி அதில் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் பங்குபெற்றால் நிச்சயம் இன்னும் அதிக கருத்துக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

பாஜகவினர் பலரும் அவரது வீடீயோக்களை பகிர்ந்து வருவதுடன் நல்ல கருத்துக்களை ஆதாரத்துடன் அடையாளபடுத்துகிறீர்கள் எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.