மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் குறிப்பாக உங்கள் தந்தை எப்படி அமைச்சரானார் நீங்கள் எந்த அமைச்சரவையில் தொற்றி கொண்டு இருந்தீர்கள் என கேட்டு வெளுத்து எடுத்துவிட்டார் நிர்மலா சீதராமன் இது குறித்து அவர் கொடுத்த பதில் பின்வருமாறு :-
"நான் கேள்வி கேட்கும்போது அவையில் இருக்க வேண்டும் அல்லவா? எங்கே போனார்! கேவலம் (After all) ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்தானே என்று நேற்று கேட்ட மக்களவை உறுப்பினர் ஒன்றை அறிய வேண்டும்.
நான் நியமன உறுப்பினர் அல்ல, ராஜ்யசபாவுக்கு முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்! நியமன உறுப்பினர் என்றாலும் அதுவும் மரியாதைக்குரியதுதான். ராஜ்யசபா உறுப்பினர் என்றால் என்ன அப்படி ஒரு ஏளனம்?
அப்படியானால் ராஜ்யசபா உறுப்பினரான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஏன் பத்தாண்டுகள் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்தீர்கள்? இந்த கேள்வி கேட்ட உறுப்பினர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.
அவரது தந்தையும் மூன்றுமுறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர்தான் அவர் காமர்ஸ் மினிஸ்டராக இருந்தபோது தோஹா மாநாட்டில் ஆற்றிய அரும்பணியை எனது குரு அருண் ஜெட்லி சொல்லிக் கேட்டிருக்கிறேன். 2014 இல் நான் காமர்ஸ் மினிஸ்டரானபோது அது எத்தனை கடினமான காரியம் என்பதை உணர்ந்தேன்.
அந்த மனிதரிடமிருந்த பணிவு இவரிடம் இல்லை. தலைக்கனம் மிகவே இருக்கிறது. அவரது கேள்விகளுக்கு நான் பதிலளிக்கும் நேரத்தில் அவர் இங்கு இல்லை. இது அவரின் அலட்சியத்தைக் காட்டுகிறது நான் நேற்று இங்கே இல்லாதபோது எனது துறையின் இணையமைச்சர் இருந்தார்.
அவர் கேட்ட கேள்வி ஒன்றில் உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் உள்ளன, மற்ற கேள்விகளில் சரியான விவரம் இருக்கும் என்று என்னால் கூற முடியாது.2012-13 இல் WTO வில் கண்ணை மூடிக்கொண்டு "விவசாயிகளிடம் கொள்முதல் செய்யமாட்டோம்!" என்று காங்கிரஸ் அரசு கையெழுத்து போட்டுவிட்டு வந்தது.
அதனால் 2014, 2015, 2016 இல் நமது விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள், 2017 இல்தான் மோடி அவர்கள் அதை நீக்கினார், அதனால், கொரோனா காலத்திலும் நமது மக்களுக்கு இலவசமாக தானியங்களை வழங்க முடிந்ததுஇல்லையெனில் என்னவாகி இருக்கும்! நினைக்கவே பயமாக இருக்கிறது.
பட்ஜெட் விவாதத்தின்போது நிதி அமைச்சர் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்க காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.அமைச்சரின் சூட்டை தாங்க முடியாமல் காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர்!
"வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு, அதற்கு தகுந்த புள்ளி விவரங்களுடன் பதிலளிக்கும்போது குறைந்த பட்சம் கேளுங்கள்ஏன் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்?" என்று மேலும் சீண்டினார்நிர்மலா சீதாராமன்.
"கேட்பதற்கும் ஒரு முதிர்ச்சி வேண்டும்" என்று ராகுல் காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் நொறுக்கி எடுத்தார்.மொத்தத்தில் வெளு வெளு என தயாநிதிமாறனை வெளுத்து எடுத்துவிட்டார் நிர்மலா சீதாராமன்.
More Watch Videos