24 special

காவிரி விவகாரம்...நம் நாட்டை எதிரி நாடக கர்நாடக காங்கிரஸ் பார்க்கிறது... அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவிரி விவகாரத்தில், கர்நாடக எதிரி நாடக பார்க்கவில்லை. அங்கு இருக்கும் காங்கிரஸ் தான் எதிரி நாடக பார்க்கிறது என்று திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு பதில் தெரிவித்துள்ளார்.தமிழகத்திற்கும்- கர்நாடக மாநிலத்திற்கும் உள்ள பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு கொடுத்தாலும் கர்நாடகாவில் இருக்கும் அரசு தண்ணீர் குறைந்த அளவு மட்டுமே திறந்து விட முயன்று வருகிறது.


மேலும் அப்டியே திறந்துவிட்டாலும் அங்கு இருக்கும் கர்நாடக அமைப்பினர் போரட்டத்தை கையில் எடுக்கின்றனர்.இதற்கிடையில் தமிழக விவசயிகளின் பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டது. இதற்காக பல கட்சி தலைவர்கள் விவசயிகளுக்கு ஆதரவாகவும் திமுக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும் கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தில் சுமுக உடன்பாடு ஏற்படுத்த எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆனால், மத்திய அரசு தான் இதற்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டை தமிழக மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்: கர்நாடக அரசு தமிழ்நாட்டை ஏதோ எதிரி நாடு போல நடந்து கொள்வதாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், ஒழுங்காற்று குழு ஒழுங்காக ஆற்றவில்லை.. காரணம் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வலியுறுத்தினோம்.

ஆனால், அவர்கள் நாளொன்றுக்கு 2600 கன அடி நீர் மட்டுமே திறந்து விடுவோம் என்று அந்த அரசு கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. எதோ போருக்கு நாம் செல்வது போன்று கர்நாடக அரசு எதிரி போல பார்ப்பதாக கூறினார்.இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் துரைமுருகனுக்கு பதிலளித்துள்ளார். எங்களை எதிரி நாட்டை போல கர்நாடகா பார்க்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார்.

பிறகு எதற்கு இந்தியா கூட்டணி.. ஒருவேளை நீங்கள் ஜெயித்து வந்தால் கூட உங்களால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா என்று இந்தியா கூட்டணி தலைவர்களை பார்த்து கேட்கிறேன். சம்பந்தமே இல்லாத... சித்தாந்தம் இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு பக்கம் அகிலேஷ் யாதவ், ஒருபக்கம் மம்தா பானர்ஜி, ஒரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால். திமுகவும் காங்கிரசும் காவிரி விவகாரத்தில் நடனமாடுவது நன்றாக தெரிகிறது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதுதான் உண்மை. என்று அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.