நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த வாரம் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. அப்போது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது இதனால் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை வைத்து பேசி வருவது சர்ச்சையாக மாறியுள்ளது . இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது பேசுனாலும் தற்போது திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் இணைய பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்டு கலாய்த்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அப்பாவை சங்கி என சொல்லியதும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனம் வைத்தும் சமீபத்தில் பதிவிட்டது சர்ச்சையாக மாறியது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடிச்சு 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் முன்னதாக விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் பெரியதாக கைகொடுக்காததால் ரசிகர்களிடம் நெல்சன் பெயர் ஏமாற்றத்தை கொடுத்தது.
ரஜினிகாந்த் அடுத்த படத்தை நோக்கி நகர்ந்துள்ளார். வேட்டையன் படத்தில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முன்னணி ஹீரோ ஒருவரை சரமாரியாக கலாய்த்து தள்ளியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இசை வெளியிட்டு விழா நடந்தபோது விஜய் குறித்து பேசியதும் படத்திற்காக ரஜினி விளம்பரம் தேடுகிறார் என பேசப்பட்ட்டது.
ரஜினி தனது நண்பரும் உச்ச நடிகருமான ஒருவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது ஜெயிலர் வெளியானதும் அவரது நண்பரும் டாப் ஹீரோவுமான ஒருவர் படம் பார்க்க வேண்டும் என ரஜினியிடம் கேட்டிருந்தாராம். ரஜினியை 'அவன் - இவன்' என ஒருமையில் கூப்பிடும் அளவிற்கு உரிமையான அந்த ஹீரோவுக்கு ஜெயிலர் படத்தை தனியாக ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துவிட்டு ரஜினியிடம் பேசிய அந்த ஹீரோ, "படம் சூப்பர்...வயிறெல்லாம் எரியுதுடா... எப்படி உனக்கு மட்டும் இப்படிலாம் டைரக்டர்ஸ் கிடைக்குறாங்க. நெல்சன் கிட்ட சொல்லி எனக்கு ஒரு படம் பண்ண சொல்லு. அவருக்கு எவ்ளோனாலும் சம்பளம் கொடுக்குறேன்" எனக் கேட்டாராம்.
ரஜினிகாந்த் அதுமட்டும் இல்லாமல் அந்த ஹீரோவுக்கு பத்து வருசத்துல ஒரு படம் கூட ஹிட் ஆகல என பங்கமாக கலாய்த்தார். இந்த காணொளி மட்டும் இணயத்தில் வைரலாக அடர்க்கு ரசிகர்கள் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லது மோகன்பாபு இருவரில் ஒருவராக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து தலைவரே உங்களது படமே பத்துக்கு ஐந்து தான் வெற்றி பெறுகிறது என ரஜினியையும் கலாய்த்து வருகின்றனர்.