ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய 2024 லோக்சபா தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது, ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் தொடர்ச்சியாக இரண்டு ஆட்சியை கைப்பற்றிய பாஜக மத்தியில் மோடி அவர்களை பிரதமராக பொறுப்பேற்க வைத்து நாட்டை வளர்ச்சி பாதையை சீரிய முறையில், உலக நாடுகள் வியக்கும் வகையில் முன்னேற்றக் கொண்டு போய் உள்ளது. அதே சமயத்தில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஒரு கூட்டணியை உருவாக்கி, அதில் பாஜகவிற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டும் வந்தது.
இருப்பினும் அந்த கூட்டணி தேர்தல் முடியும் வரை மட்டுமே தேர்தல் முடிவதற்கு முன்பாகவும் முடிந்த உடனே இந்த கூட்டணியில் இருப்பவர்களை இப்படி ஒன்று சேரவே பார்க்க முடியாது என்று பாஜக தரப்பில் கூறப்பட்ட வந்தது. அதேபோன்று இன்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் அவரது பிரதிநிதி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினும் அதன் கலந்து கொள்ளவில்லை அவருக்கு பதிலாக டி ஆர் பாலு கலந்து கொள்கிறார் என்ற செய்திகள் வெளியானது.
இதன் மூலமே இண்டி கூட்டணி குறித்து பாஜக தரப்பில் கூறப்பட்ட அனைத்தும் தற்போது உண்மையாகி வருகிறது என்ற விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது. அதே சமயத்தில் முதல்வர் எதற்காக இந்த கூட்டணிக்கு செல்லாமல் டி ஆர் பாலுவை அனுப்பியுள்ளார் என்பது குறித்து, இண்டி கூட்டணி கூட்டத்திற்கு எந்த பெரிய தலைவர்களும் செல்லவில்லை, இரண்டாம் கட்ட தலைவர்களே செல்கிறார்கள். மேலும் தேர்தல் முடிந்த பிறகு வரக்கூடிய ஒரு அனுமானமான யார் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த எக்ஸிட் போலுக்கும் காங்கிரஸ் பங்கேற்காது என்று காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, ஏழாவது கட்ட இந்த வாக்குப்பதிவு நடக்கும் பொழுது தெரியும் யாருக்கு பெரும்பான்மையான தொகுதிகள் செல்லும் என்று!
ஆனால் அதற்கு முன்பாகவே காங்கிரஸ் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளும் வகையில் இண்டி கூட்டணியின் கூட்டத்திற்கு நேற்று வரை போவதாக கூறிய முதல்வரும் இன்று செல்லவில்லை. இதன் மூலமே தெரிகிறது தேர்தல் நடக்கும் வரை தான் அவர்களது கூட்டணி, நாங்கள் துணை பிரதமராக இருப்போம், பிரதமராக அமருவோம் என்ற பேச்சு!! தேர்தல் நடந்து முடிக்கும் பொழுது தெரியும் பிரதமர் அவர்கள் மீண்டும் பிரதமராக அமருவார்கள், என்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இண்டி கூட்டணியின் மனப்போக்கை தெள்ளத்தெளிவாக கூறினார்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் வாக்கு எண்ணிக்கையின் பொழுது, முதலில் ஈ டி பி எஸ் மற்றும் சாதாரண தபால் வாக்குகளை உள்ளடக்கிய தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட வேண்டும் என்றும், 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். மேலும் தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை கடைசி சுற்றி எண்ணிக்கையை அறிவிக்க கூடாது என அடுக்கடுக்காக பல வேண்டுகோள்களை முன்வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்திலும் திமுக லோக்சபா தேர்தலின் மூலம் சந்திக்கப் போகும் பின்னடைவை இந்த அவசர கடிதத்தின் மூலமே ஒப்புக்கொண்டு விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் ஊழியர்கள் அதிருப்தியில் திமுகவிற்கு வாக்களிக்காமல் இருப்பதாக அறிவாலயம் நம்புவதாகவும் அது வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் அறிவாலய வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுவதாக சில தகவல்கள் கசிகின்றன...