24 special

கர்நாடக அரசியலை பதம் பார்க்கும் பில்லி, சூனிய ஏவல்... அலறும் காங்கிரஸ்....

DK SIVAKUMAR
DK SIVAKUMAR

இந்திய அரசியல் முழுவதும் இடதுசாரி மற்றும் வலதுசாரி என இரு தரப்பாக பிரிந்துள்ளது. இதில் கடவுள் நம்பிக்கை கொண்ட மற்றும் மனித நேயம், இறை பக்தி ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ள பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபுறம் எனில் மற்றொருபுறம் சனாதனத்தை எதிர்க்கும், கடவுள் நம்பிக்கையையும் மறுக்கும், குறிப்பாக இந்து மத கடவுள் நம்பிக்கையை மறுக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள் தரப்பினர் மறுபுறம் உள்ளனர். இதில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கடுமையாக விமர்சித்து அதை ஒழிப்பேன் எனக் கூறியதற்கு பாஜக மற்றும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு வழக்குகளும் தீவிர படுத்தப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனங்கள் எடுக்கப்படாமல் அவரது பேச்சுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது அவரின் கருத்து என்று கூறி மழுப்பியது. 


ஆனால் இந்த விவகாரமே காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியின் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மொத்தமாக இந்த சமயத்தின் மீதும் நம்பிக்கையின் மீதும் விமர்சனங்களை அள்ளி வீசி வந்த காங்கிரஸே இன்று தங்களுக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கூறி உள்ளதே அரசியல் வட்டார முழுவதும் வேடிக்கையாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து யார் முதல்வர் என்று ஒரு இழுபறிக்குப் பின்பு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டு துணை முதல்வர் பதவியில் டி கே சிவக்குமார் அமர்த்தபட்டார். மேலும் முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு வருடங்களை கர்நாடகா காங்கிரஸ் அரசு நிறைவு செய்துள்ள நிலையில் தனக்கு எதிராகவும் முதல்வர் சித்தாராமையாவிற்கு எதிராகவும் சில அரசியல் எதிரிகள் அகோரிகளை வைத்து கேரளாவில் சூனியம் செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை டி.கே.சிவகுமார் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

அதாவது, கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு அருகே ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் தனக்கு எதிராகவும் சித்திராமையாவிற்கு எதிராகவும் ஒட்டுமொத்த காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காகவும் அகோரிகளால் யாகம் நடத்தப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகவும், இந்த யாகத்தை மேற்கொண்டவர்களின் முக்கிய நோக்கமே எதிரிகளை அழிப்பது தான். அந்த யாகங்களின் பெயரானது ராஜ கண்டக மற்றும் மரண மோகன ஸ்தம்பனா யாகங்கள் என்று கூறப்படுகிறது. இவற்றை அந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களை தங்களிடம் கூறி உள்ளதாக பகிர் கிளப்பியுள்ளார். அதுமட்டுமின்றி 21 சிகப்பு ஆடுகள், 21 வெள்ளாடுகள், மூன்று எருமைகள் மற்றும் ஐந்து பன்றிகள் இந்த யாகத்திற்காக பலியிடப்பட உள்ளது.

அவற்றை யார் நடத்துகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் முடியும் வரை தொடர்ந்து முயற்சி செய்யட்டும், நான் நம்புகின்ற சக்தி என்னை காக்கும் என்று கூறிய டி கே சிவகுமார் தங்களுக்கு எதிராக யார் இதனை மேற்கொள்கிறார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்காமல் சென்றுள்ளார். இப்படி ஒரு சமயத்தில் கடவுளின் நம்பிக்கை பெரிதானதல்ல குறிப்பாக சனாதன தர்மம் இந்து மத நம்பிக்கைகளை விமர்சித்து வந்த காங்கிரஸ் இப்படி திடீரென தனக்கு எதிராக சூனியம் வைத்துள்ளதாக கர்நாடகா காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் ஒரு குண்டை போட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலமாக நீங்கள் என்னதான் கூற வருகிறீர்கள் என்ற பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. மேலும் கர்நாடகா மக்களிடையே ஒரு குழப்பத்தையும் துணை முதல்வர் சிவகுமாரின் கருத்து எழுப்பி உள்ளது.