24 special

அன்று ரயிலுக்கு டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்....இன்று ரயிலை வாங்கும் அளவிற்கு ஊழல் செய்து வைத்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்!

jagathrakshakan
jagathrakshakan

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அக்.05 முதல் சோதனை மேற்கொண்டனர். இதனை பார்க்கும்போது பாதி ஊழல் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று தகவல் வந்துள்ளது. இந்த சோதனையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்களும் சிக்கியது, மேலும், வெளிநாட்டு பணமும் இந்த சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியானது.


சோதனை முடிந்த பிறகு வருமான வரித்துறை 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு நடந்துள்ள விபரத்தை வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவித்திருந்தது. 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ள என்று வருமான வரித்துறை தெரிவித்திருத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வருமான வரித்துறை சோதனைக்கு 'உழைத்து சம்பாதிக்கிற ஒருவருக்கு, வருமான வரித்துறையை ஏவி நெருக்கடி கொடுக்கிறது மத்திய அரசு' என்று தி.மு.க., அமைச்சர் பொன்முடி அறிக்கை விட்டார்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த சோதனைக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தார்.தற்போது ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததை கொண்டு பார்க்கையில், 1,250 கோடி ரூபாய்க்கு ஜெகத்ரட்சகன் நியாயமான, நேர்மையான முறையில் வரி செலுத்தி இருந்தால், அதை கொண்டு நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி தந்திருக்கலாம். கோடிக்கணக்கான மாணவர்களுக்கு பள்ளி செலவை செலுத்த முயற்சி செய்து இருக்கலாம். நாட்டில் பல பேர் சுயதொழில் தொடங்க முதலீட்டுக்கு வழி வகுத்திருக்கலாம்.

நாட்டில் உள்ள பலர்க்கு இலவச அரிசி, சுகாதார காப்பீடு, சாலை வசதி என, பல்வேறு மக்களுக்கு நல பணிகளை செய்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு வரி ஏய்ப்பு செய்து இப்படி சிக்கி கொள்கிறார்கள்.ஜெகத்ரட்சகன் போன்றோரது வாழ்க்கையை, 40 - 45 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால், ரயிலுக்கு டிக்கெட் கூட வசதி இல்லாத நிலையில் இருந்தவர்கள் தான் இப்போது அரசியலில் நுழைந்து பல்வேறு ஊழல்களை செய்து கோடி கணக்கில் பதுக்கி வைத்து மாட்டி கொள்கிறார்கள்.

அப்போது டிக்கெட் எடுக்க வழியில்லாமல் இருந்தவர் ஆனால், இன்றோ, அந்த ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால், அதை வாங்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர்.முறையாக வரி செலுத்தாமல், அந்த பணத்தை பல்வேறு இடங்களில் பதுக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெகத்ரட்சகன் சொந்தமான இடத்தில கண்டுபிடிக்கப்பட்டது யானையின் வால் பகுதி தான்; முழு பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் தான் உள்ளது.

இவரை போன்று நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் துரோகம் செய்து வரும் பொருளாதார குற்றவாளிகளை, சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் தெரியவரும் முழு சொத்து மதிப்பு மற்றும் இன்னும் எங்கே ஊழல் செய்து மறைத்து வைத்திருக்கார் என்று இதுவரை கிடைத்தது எல்லாம் பதித்தான் இன்னும் மீதியை கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.