Cinema

மாற்று திறனாளிகளுக்கு உதவிய இரண்டு நட்சத்திரங்கள்..!

raghva Lawrence
raghva Lawrence

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள், நடிகைகள் என அனைவரையும் பின்பற்றும் ரசிகர்கள் அவர்களின் செயல்களை பார்த்து வருவார்கள். சினிமா விமர்சர்களுக்கும் நேரடியாக நட்சத்திரங்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும் மக்களுக்கு உதவி செய்வதில்லை என விமர்சனம் செய்கின்றனர். சில பிரபலங்கள் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பதற்காகவும், சிலர் தெரியவே கூடாது என சொல்லியும் உதவி செய்கிறார்கள். சில நடிகர்கள் உதவி செய்வது ஊடகத்தில் வெளியாகும்.


அந்த வகையில், சின்னத்திரையில் அறிமுகமான காமெடி நடிகர் பாலா தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருவது தொடர்பான விடியோக்கள் அனைத்தும் இணையத்திலும் ஊடகத்திலும் வெளியானது. தொடர்ந்து, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருவது, கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ, மழை வெள்ளத்தின் போது உதவியது, மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தது என தன்னால் இயன்ற பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் பாலா. 

சமீபத்தில் கூட பெட்ரோல் பங்க்கீல் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்தார் பாலா. அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ செய்தது. இந்த சூழ்நிலையில், பாலாவுடன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணைந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படும் பெண்ணுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்தார்கள். 

இந்நிலையில், இணையத்தில் பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மீண்டும் ராகவா லாரென்ஸ் இணைந்துள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகளான இந்த அழகான குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் என்னிடம் வாகனம் கேட்டார்கள். எனவே நானும் எனது ரோல்மாடல் ராகவா லாரன்ஸ்  மாஸ்டரும் சேர்ந்து இந்த அழகான குடும்பத்திற்கு இந்த வாகனத்தை வாங்குவதற்கு சமமாக பணத்தை பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார். இந்த விடியோவிற்கு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்கு கோடி கோடியாய் சம்பாதித்து யாருக்கும் உதவி புரிவதில்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து, உதவி செய்து வரும் பாலா சமீபத்தில் தனக்குத் திருமணம் என்ற விஷயத்தை சொல்லி இருந்தார் பாலா. ஆனால், இவரின் தாராள மனசு குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெண் வீட்டார்கள் நினைத்திருப்பதாக சில தகவல் வெளியானது. இது குறித்து பாலா எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை மீன்டும் திருமணம் குறித்து ஏதும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.