24 special

விளையாட்டுதுறை அமைச்சர்க்கு உயர்நீதிமன்றத்தில் வைத்த பெரும் ஆப்பு...!

udhayanithi, highcourt
udhayanithi, highcourt

சாதாரண விஷயமாக நினைத்து சனாதனம் குறித்து பேசிய உதயநிதி தற்போது நீதிமன்றத்தில் வலுவாக சிக்கி முன்னுக்கு பின் முரனான தகவலை கூற அது ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக மாற என்ன நடக்க போகிறதோ என உதயநிதி ஸ்டாலின் தரப்பு மிரண்டு போயிருக்கிறது.நிலைமை இப்படி இருக்க நேற்று உதயநிதி ஸ்டாலின் தரப்பு அண்ணாமலையை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வைத்த வாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.


சனாதனம் தொடர்பாக நான் மேற்கோள் காட்டியது தொடர்பான விவகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குவதாக உதயநிதி ஸ்டாலின்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று  வாதமாக முன்வைக்கப்பட்டது.சனாதனம் பற்றி அருவருக்க தக்க வகையிலும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி பேசிய விவகாரத்தில்  திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கிஷோர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் திமுக எம் பி வில்சன் ஆஜராகி வாதடினார் அப்போது யாரும் எதிர் பாரத வகையில் வில்சன் தெரிவித்த வாதத்தை கேட்டு நீதிமன்றமே சற்று குலுங்கி சிரிக்கும் நிலை உண்டானது.“மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் சனாதனம் குறித்து பாஜகவினர் உதயநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

சனாதன வழக்கை பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார். உதயநிதி சனாதனம் பற்றி பேசியது தொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தான் தாக்கல் செய்ய வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்கள் கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. மனுதாரர் ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நீதிபதி அனிதா சுமந்த் வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உதயநிதி தரப்பு சனாதன வழக்கில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகிறது நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் அமைச்சர் உதயநிதி என்ற அடிப்படையில் சனாதன தர்மம் குறித்து பேசவில்லை மாறாக தனிப்பட்ட மனிதனாக கருத்து தெரிவித்தாக உதயநிதி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தது மிக பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.என்னடா  இது பதவியே போனாலும் பரவாயில்லை எனக்கு கொள்கை தான் முக்கியம் எனவும் தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக பேசிய உதயநிதி ஒரே நாளில் ஜகா வாங்கிவிட்டாரே என பலரும் விமர்சனம் செய்த நிலையில் இப்போது அண்ணாமலை உதயநிதி பேசியதை அரசியலாக்க பார்க்கிறார் என நீதிமன்றத்தில் உதயநிதி பல்டி அடித்து இருப்பது தமிழக அரசியலில் திருப்பு முனையாக மாறி இருக்கிறது.

இவை அனைத்தையும் தாண்டி வழக்கு விசாரணையில் உதயநிதி அண்ணாமலை பெயரை குறிப்பிட்டு பேசி இருப்பதால் நடைபெற்று வரும் சனாதன வழக்கில் உதயநிதிக்கு எதிரான வாதியாக தன்னையும் சேர்த்து கொள்ள அண்ணாமலை நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தனது தரப்பு கருத்தை அண்ணாமலையே எடுத்து கூற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.என்னடா இது தேவையில்லாமல் வழக்கை அரசியல் வழக்காக திசை திருப்ப சென்று தற்போது அண்ணாமலையை வழக்கிற்குள் கொண்டு வர நாமே உறுதுணையாக மாறிவிட்டோமோ என புலம்ப தொடங்கி இருக்கிறதாம் உதயநிதி தரப்பு.வழக்கை சாதாரண அரசியல் வழக்காக எடுத்து கொள்ளாமல் தீவிர வழக்காக நீதிமன்றம் தொடர்ச்சியாக விசாரணை செய்து வருவதால் அண்ணாமலையும் வழக்கிற்குள் என்ட்ரி ஆகும் பட்சத்தில் நிச்சயம் உதயநிதிக்கு விழுந்த பெரும் ஆப்பாக தற்போதைய நிலை மாறி இருக்கிறது.