
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில் 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தமே இல்லாமல் நடந்தது தான் அனைவரும் தமிழக அரசின் மீது விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் உதலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 தேதிகளில் 2 நாட்களாக நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் சிறந்த தொழில் சூழல் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் மிக பிரமாண்டமாக நடந்து.
இந்த விழாவில் கிரியேட்டிவ் எக்கானமி பற்றிய கலந்துரையாடலில் சமையல் கலை விடீயோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking channel) யூடியூப் சேனல் குழுவினர் கலந்து கொண்டனர். இதனை கண்ட பலரும் இவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இவர்கள் மேடையில் ஏறி அவர்கள் சமையல் பத்தி பேசுகிறார்கள் ஒரு லாட்ஜிக் இல்லாமல் அவர்களை அழைத்துள்ளனர் என பேசு பொருளாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது, அப்போது பிரபல நடிகையும் படலாசிரியருமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு பாடல்களை பாடினார். 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!' என்ற பாடலைப் பாடியபடி நடனம் ஆடினார். அடுத்து, 'ஊ சொல்றியா மாமா’, ‘ரம்பம்பம்’ ஆகிய பாடல்களையும் பாடி ஆடினார். நடிகை ஆண்ட்ரியாவின் நடனம் ஆகியவை இணையத்தில் வைரலானது அடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இது என்ன உலக முதலீட்டாளர்கள் மாநாடா அல்லது கலைஞர் 100 விழாவில் விடுபடத்தை தமிழக அரசு இங்கே கொடுவந்து கொண்டாடுகிறதா என விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.
நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிவடைந்த நிலையில் ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம் அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் நாட்களில் தெரியவரும் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து உண்மைதானா இல்லை விளம்பரத்திற்காக செய்ததா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அரசியலை விமர்சகர்களால் கூறப்படுகிறது.