தமிழகத்தில் எது நடக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்த்து இருந்தார்களோ அது நடந்து இருக்கிறது, தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார், பல்வேறு அமைச்சர்களின் இலகாவில் மாற்றம் உண்டாகி இருக்கிறது.
உதயநிதி அமைச்சராக பொறுப்பு ஏற்பது முதல்வர் பொறுப்பு ஏற்பதற்கு இணையாக ஏற்பாடுகளை ஆளும் கட்சி செய்து இருந்தது, இந்த நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பு ஏற்பது மிகுந்த உற்சாகத்தை திமுகவினருக்கு கொடுக்கும் என அக்கட்சி கணக்கிட்டு இருக்கும் சூழலில் தற்போது திமுகவினருக்கு இணையாக பாஜகவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுநாள் வரை திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை வைத்த குற்றசாட்டு விமர்சனம் போன்றவற்றிற்கு பல்வேறு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர், சில அமைச்சர்கள் பதறி கொண்டு அண்ணாமலை குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய ஊடகத்தினரிடம் பதில் அளிக்காமல் பதறி கொண்டு ஓடிய சம்பவமும் அரங்கேறியது.
இதுநாள் வரை பாஜக குற்றசாட்டு குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பினால் பெரும் பாலும் தவிர்த்தே வந்தார், ஊடகம் ஒன்றில் அண்ணாமலை குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பிய போது கூட அவர் எங்களை விமர்சனம் செய்வதாக கேள்வி பட்டேன் ஆனால் நான் பார்க்கவில்லை என மலுப்பலாக பதில் கொடுத்தார்.
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால் நேரடியாக அவரது துறையில் நடைபெறும் டெண்டர்கள், நியமனங்கள் உள்ளிட்ட பலவற்றை நேரடியாக கவனிக்க பாஜக முடிவு செய்து இருக்கிறதாம், இது ஒருபுறம் என்றால் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பு உதயநிதி சினிமா துறையில் தலையிட்டால்... அதை வைத்தே மிக பெரிய அளவில் திரை துறையினரை ஒருங்கிணைக்கும் முடிவிற்கு பாஜக வந்து இருக்கிறதாம்.
ஏற்கனவே பல்வேறு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உச்ச நடிகர்கள் தொடங்கி வளரும் நடிகர்கள் வரை, சினிமா துறையில் ஆளும் கட்சியினர் தலையீடு குறித்து கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பும் உதயநிதி சினிமா துறையில் முன்பு போல நிகழ்ச்சிகள், பட விநியோகம் போன்றவற்றில் தலையிட்டால் முதல் எதிர்பாக பாஜக கையில் எடுக்க இருக்கிறதாம்.
மகாராஸ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பாலிவுட் சினிமா நடிகர்கள் மத்தியில் தலையிட்ட நிலையில் சிறு சிறு எதிர்ப்புகளாக எழுந்து அக்கட்சி கூட்டணி ஆட்சியே கவிழ்ந்தது, தமிழகத்தில் அது போன்ற கூட்டணி ஆட்சி சூழல் இல்லாத நிலையில் திமுக தனித்து ஆட்சியில் இருக்கிறது.
இருப்பினும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை திமுகவிற்கு உண்டாக்கும் விதமாக உதயநிதியை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்க இருக்கிறதாம் பாஜக... உதயநிதி அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பு முதல் பந்தாக பாஜக வீச போகும் பந்தில் உதயநிதி நிச்சயம் முன்பு போல் தெரியாது என கடந்து செல்ல முடியாது, பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கின்றனர் அரசியல் தெரிந்தவர்கள்.
அரசியல் வாரிசிற்கும் சினிமா வாரிசிற்கும் இடையே நேரடியாக நடைபெற்ற இறுதிகட்ட மோதல் குறித்து விரிவாக பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.