24 special

பொது கூட்டத்தில் அமிட்ஷா பேசிய வார்த்தை....!உண்டான அதிரடி திருப்பம்...!

Amitsha, annamalai
Amitsha, annamalai

உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேற்று ராமேஸ்வரம் பொது கூட்டத்தில் திமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் இந்த நிலையில் தான் அதில் அதிரடி திருப்பம் உண்டாகி இருக்கிறது.நேற்று ராமேஸ்வரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க விருப்பம். மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார். தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு. கைது செய்யப்பட்டவரை அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்ககரமானது. அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்தாலும் ஸ்டாலின் ஏற்கமாட்டார். செந்தில் பாலாஜியை ராஜிநாமா செய்யச் சொன்னால் ரகசியங்களை போட்டு உடைப்பார். 


தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது. மின்துறையிலும் ஊழல் செய்துள்ள அரசு, தமிழக அரசு. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாகின. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கின்றனர். யுபிஏ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்தது. இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்பட்டதற்கு இதே கூட்டணிதான் காரணமாக இருந்தது என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்படி அமிட்ஷா விமர்சனம் செய்தது ஒரு புறம் என்றால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது அங்கு சோதனை நடத்திய அதிகாரிகளை திமுகவினர் தாக்கும் வீடியோ வெளியாகி மிக பெரிய அதிர்வலைகளை நாடு முழுவதும் உண்டாக்கியது.

அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த படுவார்கள் என பலரும் எதிர் பார்த்து இருந்த நேரத்தில் அதிகாரிகளை தாக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கி கீழமை நீதிமன்றம் உத்தரவு போட்டது.இந்த நிலையில் அதனை எதிர்த்து எந்த சட்ட நடவடிக்கைக்கும் செல்வோம் என வருமான வரித்துறை முடிவு செய்த நிலையில் நேற்று அதிகாரிகளை தாக்கிய நபர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது.

அதோடு நில்லாமல் உடனடியாக அனைவரும் நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவு போயிருக்கிறது இல்லை என்றால் கைது செய்ய பிடியானை பிறப்பிக்கப்பட இருக்கிறது.  ஒரு பக்கம் அமித்ஷா முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை பாதுகாப்பது ஏன் என கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருக்க மறுபக்கம் அதிகாரிகளை தாக்கிய திமுகவை சேர்ந்தவர்களுக்கு காப்பு உறுதியாகி இருப்பது கரூர் திமுக வட்டாரதிலும் ஒட்டுமொத்த திமுகவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

அமிட்ஷாவே நேரடியாக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்து இருப்பது குறித்து விமர்சனம் செய்து இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய இப்போதே தயாராகி வருகிறதாம் ஆளும் தரப்பு.