மருத்துவமனையில் செந்தில்பாலாஜி இருக்கும் சமயம் மறைக்கப்பட்ட ஆவணங்கள் பற்றிய பகீர் தகவலால் மீண்டும் இறங்கியது வருமானவரித்துறை!கடந்த மாதம் மே 26 ஆம் தேதியன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அலுவலகம் பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் உள்ளிட்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் டாஸ்மார்க் மற்றும் மின்சார துறையில் டெண்டர் எடுத்து ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர்களும் அரசு ஒப்பந்ததாரர்களாக உள்ளவர்களின் வீடுகளிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திடீரென ரெய்டில் ஐடி அதிகாரிகள் இறங்கி இருந்தாலும் ரெய்டு நடைபெற்ற பெரும்பாலான இடங்களின் முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வந்தனர். இந்த வரிசையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் கரூர் மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு அதிகாரிகள் வரும்பொழுது அவர்களின் வாகனங்களை நிறுத்தியும், வாகனங்கள் மீது கல் எரிந்தும் சோதனை செய்ய சென்ற அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஒரு பெண் அதிகாரியும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் புகார் மத்திய அரசு வரை சென்று அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியது. கிட்டத்தட்ட எட்டு நாட்கள் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர் இறுதியில் பல ஆவணங்கள் மற்றும் கோப்புகளை மூட்டை மூட்டையாக வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இதற்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தி கைது செய்ய முற்பட்டு தற்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மறுபடியும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் கரூர் - ஈரோடு சாலையில் உள்ள அன்னை அப்பார்ட்மெண்ட், சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளார்.
நேற்று ரெய்டு நடைபெற்ற சக்தி மெஸ் கார்த்திக் வீட்டில் கடந்த மாதம் ஐடி சோதனை மேற்கொண்ட பொழுதும் ரெய்டில் அதிகாரிகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அன்று ரெய்டு மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த இடங்களில் யாரும் இல்லாத காரணத்தினால் சக்தி மெஸ் வீடு மற்றும் ஹோட்டல் என இரண்டு இடங்களிலும் ஐடி அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். தற்போது நேற்றும் இந்த பகுதிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர், மேலும் கடந்த முறை ஏற்பட்டது போன்று எந்த ஒரு அசம்பாவிதமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வருமானவரித் துறையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 20 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். சக்தி மெஸ்சின் கார்த்திக் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராகவும் கூறப்படுகிறார்.
கடந்த முறையை எட்டு நாட்கள் நடந்த ஐடி சோதனை தற்போது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாத பதிலாக இருந்து வருகிறது, இந்த நிலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் கொங்கு மெஸ் உரிமையாளர் கார்த்திக்தான் கரூர் கேங்கை நிர்வகித்து வரும் நிர்வாகி எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் நிலையில் இந்த சோதனையின் சிக்கும் ஆவணங்கள் மூலம் செந்தில் பாலாஜியை மட்டுமின்றி கரூர் கேங்கை சேர்ந்த மற்ற அனைவரையும் சுற்றி வளைக்க வருமானவரித்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.