பாட்னா கூட்டத்தில் அடித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், இந்த கப்பல் கரை சேராது போலிருக்கிறதே!2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள காரணத்தினால் அந்த தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று இணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை நேற்று தொடங்கி நடத்தினர்.
கடந்த ஆண்டு தான் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநிலத்தில் உள்ள முதல்வர்களை சந்தித்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து கூட்டணி அமைப்பது தொடர்ந்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கி இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக செயல்பட திட்டம் தீட்டி செயல்பட கூட்டப்பட்டது!.
தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு பாட்னா சென்றனர். மேலும் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லி கார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர், சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் போன்றோர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் போதே 'கோ பேக் ஸ்டாலின்' என்ற எதிர்ப்பு இருந்து வந்தது.
இது மட்டுமல்லாமல் இந்த கூட்டத்திற்கு செல்வது சரிபட்டு வராது என ஒரு சில கட்சிகள் ஏற்கனவே ஒதுங்கி கொண்டனர். அதாவது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, எதிர்க்கட்சி மாநாடு நடைபெறும் நாளுக்கு முந்திய நாளே இதனை புறக்கணிப்பதாகவும் இதனால் ஒன்று ஆகப்போவதில்லை ஒன்றும் தேராது என்று கூறியுள்ளார் மேலும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோர் பாஜகவிற்கு எதிராக நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த புறக்கணிப்பு எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த முதல் அடியாக பார்க்கப்பட்டது!
ஆனாலும் ஒரு வழியாக பாஜகவிற்கு எதிராக செயல்படும் மாநில எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நேற்று தொடங்கினார். இந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற சக கட்சியினர்களுக்கியையே காரசார பேச்சுவார்த்தைகள் எழுந்து விவாத மேடையாக மாறியதாகவும் பிறகு உத்தவ் தாக்கரே சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்பொழுது மாநிலத்தில் காங்கிரஸினர் தங்களுடன் இணைந்து செயல்படாமல் இடதுசாரிகளின் கைகளை கோர்த்து இருப்பது எப்படி முறையாகும் என்று கூறியுள்ளார். பிறகு தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பற்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி வாதிட்டார். இவர்களைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தரப்பில் காங்கிரஸ் டெல்லியில் சேவை மசோதாவை ஆதரிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்பில் ஒவ்வொரு கேள்விகளை முன் வைக்க சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே நாங்கள் மகாராஷ்டிராவில் கடந்த 25 வருடங்களாக கடுமையான எதிர்க்கட்சிகளாக இருந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம் இப்போது நாங்களே ஒன்றாக செயல் படவில்லையா என்று கூறியுள்ளனர். அதனால் எங்களை போலவே பாஜகவிற்கு எதிராக தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சமாதானம் செய்த பிறகுதான் அந்த மாநாட்டில் விமர்சனங்கள் முன் வைப்பது நிறுத்திவிட்டு ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை அரவிந்த் கெஜ்ரவால் புறக்கணித்து பாதியிலே எழுந்து சென்றுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற்ற முதல் நாளே இந்த கூட்டணிகள் வெற்றி பெறாத நிலையில் அடுத்த கூடத்தையாவது நல்ல முறையில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளனர். இதற்குப் பின்னணியில் தேசிய அளவில் கட்சிகளை ஒன்றிணைக்கலாம் நாம் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்று நினைத்து சென்ற திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டால் நிலைகுலைந்துள்ள ஸ்டாலின் தேசிய அளவிலும் இப்படி அவமானப்பட்டு திரும்பி இருப்பதால் திமுகவிற்கு இது பின்னடைவாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.