சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், தனது கடலோர அரண்மனையில் ஷார்ட்ஸ் அணிந்து, கடந்த செப்டம்பரில் ஜனாதிபதி பிடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடனான சந்திப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
36 வயதான பட்டத்து இளவரசர், சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் 2018 கொலையை எழுப்பிய பின்னர் திரு. சல்லிவனைக் கூச்சலிட்டார். இந்த விஷயத்தை மீண்டும் விவாதிக்க விரும்பவில்லை என்று அரசர் அமெரிக்க தேசிய. பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவனிடம் கூறினார், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாது என பைடனிடம் தெரிவிக்குமாறும் அரசர் கண்டிப்புடன் தெரிவித்து இருக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது.
சவூதியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஜர்னலிஸ்ட் ஜமால் கஷோகி. அவரை துருக்கியில் உள்ள சவூதி அரேபிய தூதகரத்தில் கொலை செய்துவிட்டார்கள். அதற்கு காரணம் சவூதி மன்னர்தான் என அமெரிக்க பத்திரிக்கைகள் குற்றம் சாட்டி வந்தனசவூதி அரசரை சந்திக்க அப்பாயிண்மென்ட் வேன்டும் என பைடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பினார்.
சவூதி அரசரும் அப்பாயிண்மென்ட் கொடுக்க தூதர் "ஜமால் கஷோகி.." என ஆரம்பித்தார் மன்னர் முகமது பின் சல்மான் அவரை உடனே கண்டபடி மரியாதை இல்லாமல் பேசி சத்தம் போட்டதாக செய்தி. அமெரிக்க தூதர் அதிர்ச்சியடைந்து வாயடைத்து போனாராம் ,
அதிகரிக்கும் பெட்ரோல் விலையை குறைக்க, பெட்ரோல் உற்பத்தியை அதிகரிக்க பைடன் கேட்டிருந்தார். ஆனால் அதெல்லாம் முடியாது என சவூதி அரசர் கண்டிப்புடன் தெரிவித்து விட்டாராம்.