முகநூலில் இந்து மதம் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த நபர்களை NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரவுண்டு கட்டி சுற்றி வளைத்தனர் மேலும் அவர்களது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் 3 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள தஞ்சாவூர் கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர்(49), முகமதுயாசின்(30), காவேரி நகரைச் சேர்ந்த அகமது(37) ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது.அப்போது, 3 பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் 3 பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனைநடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் விரட்டி அடித்து கலைந்து போகச் செய்தனர்.
இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் நேற்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர் தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெற்ற சோதனைகளின் பின்னணியில் முகநூலில் ஒரு குழுவினர் தொடச்சியாக இந்தியா மற்றும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வந்ததன் அடிப்படையில் இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ தமிழக காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தால் அதில் பல அரசியல் தலையீடுகள் இருக்கின்றன, ஆனால் NIA வசம் புகார் தெரிவித்தால் ஆழமான நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகார் அளித்த தரப்பு ஆறுதல் அடைகின்றனர்.இனி முகநூலில் யாராவது நாட்டிற்கு எதிராகவோ அல்லது ஏதேனும் சதி செயலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதை NIA உணர்த்திவிட்டது. இனி யாராவது தவறான கருத்தை பகிர்வார்களா?
More watch videos