Tamilnadu

என்ன முதல்வரே இது தேவையா? மேற்கு வங்க ஆளுநர் கொடுத்த பதிலடி அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

Stallin
Stallin

மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்றத்தை ஒத்திவைத்து உத்தரவு ஒன்றிணை நேற்று வெளியிட்டார், இது கடுமையான அதிர்வலைகளை அரசியலில் உண்டாக்கிய சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார், இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டிய மேற்குவங்க ஆளுநர்.


மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டமன்றத்தை ஒத்திவைத்து உத்தரவு போட்டதாகவும் ஒழுங்காக தெரிந்து கொண்டு பேசுமாறு ஸ்டாலினுக்கு ரீப்ளை செய்து இருந்தார் இந்த சூழலில் இதனை சுட்டிக்காட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-


தேவையில்லாத சர்ச்சை. மேற்கு வங்காள ஆளுநர் அம்மாநில சட்டசபையை ஒத்திவைத்து உத்தரவு பிற்பித்ததையடுத்து சமூக ஊடகங்களில் அம்மாநில முதல்வருக்கெதிராக  ஆளுநர் சட்ட சபையை  முடக்கி வைத்து விட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே ஒத்தி வைத்ததாக விளக்கம் கொடுத்தார். ஆனாலும், சில அரசியலர்களும், சமூக ஊடகங்களில் பலரும் தங்களின் அறியாமையின் காரணமாக ஆளுநருக்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வந்தார்கள்.

ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ஆளுநரை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது வியப்பளிக்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் நடைமுறை, சட்டம், விதிகள் குறித்து அறியாமல் வதந்தியின் அடிப்படையில் இது போன்ற பதிவை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், மேற்கு வங்காள ஆளுநர், உண்மையை ஆராயாமல் தமிழக முதல்வர் இவ்வாறு பதிவிட்டதை கண்டித்துள்ள நிலையில்,

தவறுகள் நடப்பது இயற்கை தான் என்றாலும், உண்மை என்ன என்பதை ஆராயாமல் பதிவிட்ட பொறுப்புள்ள ஒரு முதல்வர்,  நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது, இது போன்ற பதிவுகளை செய்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநரை குற்றம் சுமத்திய நிலையில் அவரை ட்விட்டரில் டேக் செய்யவில்லை, ஆனால் மேற்குவங்க ஆளுநர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக டேக் செய்து தனது கருத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More watch videos