கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அமலாக்க துறையின் சோதனையின் விளைவாக அந்த மாத 14ஆம் தேதி அமலாக்க துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் செந்தில் பாலாஜியின் கைதே சட்ட விரோதமானது என்று வாதாடி கொண்டு வந்த திமுக வழக்கறிஞர் அணி பெரும் தோல்வியையே சந்தித்து வந்தது. அமலாக்க துறையும் செந்தில் பாலாஜியிடம் விசாரணையை மேற்கொண்டு கிட்டத்தட்ட 3000 பக்கத்தில் ஆவணங்களையும் 150 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
இதனை அடுத்து இவரது வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, எங்கு மாற்றப்பட்டாலும் உனக்கு ஜெயில் தான் உறுதி என்ற வகையில் இவரது நீதிமன்ற காவல் காலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைதை ஒப்புக்கொண்ட செந்தில் பாலாஜியின் தரப்பு அவரது ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ரவி அமலாக்கத்துறையின் தொடர்பு இந்த வழக்கில் இருப்பதால் அது தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்குவதற்கான மனுவை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்துள்ளார்.
நீதிபதி ரவியின் அறிவுறுத்தலின்படி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர்பான மனுவை தாக்கல் செய்த பொழுது இவரது ஜாமின் மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றமே தலையிட்டு முடிவை எடுக்கட்டும் என்று உத்தரவிட்டது. இப்படி இங்கும் அங்கும் செந்தில் பாலாஜி தரப்பு அலைந்து கொண்டிருக்கின்ற சமயத்தில், ஜாமீன் தொடர்பான மனுவை எங்கு தாக்கல் செய்வது என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம் சுந்தர் மற்றும் ஆர் சக்திவேல் அமர்வின் முன்பு வழக்கறிஞர் இளங்கோ முறையிட்டிருக்கிறார்.
அப்பொழுது நீதிபதி சுந்தர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரணை செய்யும் பொழுதே நீதிபதி சக்திவேல் இந்த விசாரணையில் இருந்து விலகிய நிலையில் எப்படி ஜாமீன் மனுவை ஏற்பது என்று கேள்வி எழுப்பி உள்ளார், அதற்கும் வழக்கறிஞர் இளங்கோ இன்று விடுமுறை நாள் தான் அதுமட்டுமல்லாமல் நிர்வாக ரீதியில் கூட உத்தரவை பிறப்பித்தால் போதும் என்று தெரிவித்தார், இருப்பினும் நீதிபதி சுந்தர் ஜாமீன் மனுவை யார் விசாரணை செய்ய வேண்டும் என்பது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்று கூறி செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நாடுங்கள் என்று தெரிவித்துள்ளார்,
ஆனால் தலைமை நீதிபதியும் தற்பொழுது மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து வருவதால் அவர் சென்னைக்கு திரும்பும் வரை செந்தில் பாலாஜியின் தரப்பு காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அமலாக்க துறையால் சமர்ப்பிக்கப்பட்ட 3000 பக்க குற்றப்பத்திரிக்கையில் அவர் பண மோசடி செய்தது வேலை வாங்கித் தருகிறேன் என அனைவரிடமும் பணத்தை கரந்தது அனைத்தும் பக்காவாக இருப்பதால் எந்த நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் கொடுக்க தயாராக இல்லை என்பது போலவும், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் சென்றாலும் செலவுதான் ஆகும்! ஆனால் ஜாமின் கிடைக்காது என்பது போன்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எத்தனை கோடி செலவானாலும் ஜாமீன் எடுக்க செந்தில் பாலாஜி தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது, இருந்தாலும் என்னதான் கோடிக்கணக்கில் கொட்டி கபில் சிபில் மற்றும் முக்குத் ரோஹி போன்ற பெரிய வழக்கறிஞர்களை வைத்தாலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கப்போவதில்லை என சட்ட வல்லுநர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.