Cinema

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போல நிஜ சம்பவம்....

robbery issue
robbery issue

திரைப்படங்களாக எடுக்கப்படும் சில படங்கள் அனைத்தும் தற்போது திருடர்களுக்கும் திருட்டுத் தொழிலில் ஈடுபட முயற்சிப்பவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் கொலையிலிருந்து இருந்து தப்புவதற்கும் வேண்டிய விவரங்களை கொடுக்கிறது. அதாவது நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் கமலஹாசனும் அவரது குடும்பத்தினரும் தன் மகளிடம் தவறாக நடந்து கொள்பவரை கொன்று புதைத்து விட்டு சாமர்த்தியமாக அந்தக் கொலையில் சிக்காமல் தங்களின் நிரபராதிகள் என்று நம்ப வைத்திருப்பார்கள். எப்படி என்று கதையின் பின்புறத்தை பார்த்தால் அவர் அதிக படங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் பார்த்து அதிலிருந்து ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலைலிருந்து எப்படி தப்புவது என்பதை கமலஹாசன் கற்றுக் கொண்டிருப்பதாக பாப நாசம் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.


இப்படி பல திரைப்படங்கள் மற்றும் காமெடி சீன்கள் சமூகத்தில் நடக்கும் சில அவலங்களுக்கு உதவியாகவும் உள்ளது அதே சமயத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தி சில படங்கள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமாகவும் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் பாணியிலேயே வீட்டில் உள்ள அனைவரையும் கொடூரமாக தாக்கி கொன்று விட்டு வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் இருவர்! கடந்த குடியரசு தின விழா அன்று சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அருகில் உள்ள கல்லுவழி கிராமத்தில் வசித்து வந்த சின்னப்பன் என்பவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 50 சவரன் நகைகளை திருடியதோடு வீட்டில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது ஏனென்றால் குடியரசு தின விழா அன்று இப்படி ஒரு சம்பவமா என்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதில் தங்களது விசாரணையை தொடங்கிய காவல்துறை எந்த ஒரு ஆதாரமும் துப்பும் கிடைக்காமல் திணறி நின்றது.மேலும் எட்டு தனிப்படைகளை அமைத்து காவல்துறை கொள்ளையர்களை தேடும் தீவிரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் தேவகோட்டை கிராமத்திலும் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த அனைவரையும் இரும்பு ராடால் பலமாக தாக்கி விட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிவிட்டு காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக மிளகாய் பொடி தூவி விட்டு சென்று இரண்டு பேரை கொன்று விட்டு சென்றனர். இதனால் காவல்துறையினரின் தேடுதல் பணி தீவிரமடைந்தது. இருப்பினும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள எந்த ஒரு சிசிடிவி கேமராவிலும் கொள்ளையர்கள் சிக்காமல் சம்பவ இடத்தில் எந்த ஒரு ஆதாரத்தையும் விட்டுச் செல்லாமல் மிகவும் கணக்கட்சிதமாக கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டதால் காவல்துறையினரை இதில் தீவிரமாக ஈடுபட வைத்தது அதோடு வேறு வேறு கோணத்தில் விசாரித்து அதில் எதிலும் திருடர்களை நெருங்குவதற்கான வழி கிடைக்காத காரணத்தினால் சம்பவம் இடந்த பகுதியில் காலங்காலமாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கவனிக்க ஆரம்பித்தது காவல்துறை!

அதில் தினேஷ் குமார் என்ற திருடனின் செல்போன் சிக்னல் மட்டும் ஒரே இடத்தில் ஒரு மாத காலமாக இருந்தது கண்டறிந்து அவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கினர் போலீசார்! ஆனால் காவல்துறை சந்தேகத்தில் பிடித்த தினேஷ்குமார் தான் இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டதும் அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் மாஸ்டராக இந்த கணபதி திருட்டிற்கு திட்டம் தீட்டி கொடுத்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே ஊர் என்பதால் எந்த வீட்டில் எவ்வளவு நகை இருக்கும் எந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதை அறிந்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்து அதன்படி திட்டமிட்டு இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதாக கணபதி மற்றும் தினேஷ்குமார் விசாரணையில் கூறியுள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த செய்தி காண்போர் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது ஏனென்றால் நிஜத்தை தழுவி சினிமா எடுக்கப்படுகிறதா அல்லது சினிமாவை தழுவி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா எனவும் மக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.